Home
Mobile

ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது பார்க்க வேண்டிய 10 விஷியங்கள்!!!

By Prabakaran

இன்றைய நிலைமையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனென்றால் மார்கெட்டில் அத்தனை வகையான ஸ்மார்ட்போன்கள் உள்ளன. மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல் ஹை என்ட் ஸ்மார்ட்போன்களிலும் பல வகைகள் உள்ளன.

சாம்சங் காலக்ஸி எஸ்4, ஆப்பிள் ஐபோன்5, ஹச்டிசி ஒன், சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா, எல்ஜி ஆப்டிமஸ் ஜி புரோ என ஹை என்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை வகைகள், நிறைய டிசைன்கள் என இப்படி நிலைமை இருக்கையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்குவது கஷ்டம்தான்.

சில ஸ்மார்ட்போன்கள் விலை அதிகமாக இருந்தாலும் அதற்க்கு ஏற்றாற்போல் சிறப்பாக இயங்கும். ஒரு சில போன்கள் விலை மட்டும் தான் அதிகமாக இருக்கும் அதில் பயன்கள் அதிகம் இருக்காது அதனால் ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது சில விஷியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அது என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இப்பொழுது வரும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் 5 இன்ஞ் ஸ்கிரீன்களுடன் தான் வருகிறது. டிஸ்பிளேவின் பிக்சல் திறனை பார்க்க வேண்டும். நீங்கள் மொபைலில் அதிகம் படம் பார்பவராக இருந்தால் ஹச்டி டிஸ்பிளே உள்ள மொபைலை வாங்கலாம்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

கூவாட் கோர் பிராசஸரா அல்லது டியுல் கோர் பிராசஸரா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நீங்கள் மொபைலில் கேம் அதிகாக விளையாடுபவர் என்றால் கூவாட் கோர் பிராசஸர் கொண்ட மொபைலை வாங்கலாம். அபாபொழுதுதான் போன் வேகமாக இயங்கும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

ராம்(RAM) அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். கூவாட் கோர் பிராசஸருக்கு 2ஜிபி ராம் சிறந்தது. டியுல் கோர் பிராசஸர் என்றால் 1ஜிபி ராம் போதுமானதாகும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இண்டெர்னல் மெமரி மற்றும் எக்ஸ்பேண்டபுள் மெமரி எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

கேமரா திறன் எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம் 8 மெகாபிக்சல் கேமரா இருந்தால் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இப்பொழுது 4ஜி மொபைல் பிரபலமாகி வருகிறது. நீங்கள் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த வசதி உள்ள மொபைலை வாங்குவது சிறப்பு.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

வாட்டர் புரூப் மற்றும் டஸ்ட் புரூப் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

மொபைல் வாங்கும் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் நிறைய உள்ளதா மற்றும் வாடிக்கையாளர் சேவை சிறப்பாக உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

ஒரு வருட வாரண்டி நல்லதே ஆனால் இன்னும் கொஞ்சம் செலவு செய்து வாரண்டியை இன்னொரு அதிக படுத்திக்கொண்டால் இன்னும் சிறப்பு. ஏனென்றால், வாரண்டி இல்லாமல் மொபைலை சர்வீஸ் செய்தால் செலவு அதிகமாகும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

விலை தகுந்த சிறப்பம்சங்கள் மொபைலில் உள்ளதா என்பதை தெளிவாக உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X