ஐபோன் 7 செய்யாததைச் செய்யும் ஹானர் 8!!

By Meganathan
|

டூயல் லென்ஸ் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் கருவிகளில் புதிதாய் சேர்ந்திருக்கும் கருவி தான் ஹூவாய் ஹானர் 8. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.29,999க்கு கிடைக்கும் இந்தக் கருவியில் பிளாக்ஷிப் கருவிகளில் வழங்கப்படும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அதிக சக்தி வாய்ந்த அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் ஆப்பிள் ஐபோனால் கூட செய்ய இயலாத சில அம்சங்களைக் கொண்டுள்ளது. ஐபோன் 7 கருவியில் செய்ய முடியாத ஹானர் 8 செய்யக் கூடியவற்றை பற்றி விரிவாகப் பார்ப்போமா?

சிறப்பான மல்டி மீடியா அனுபவம்

சிறப்பான மல்டி மீடியா அனுபவம்

எந்த ஸ்மார்ட்போன்களை எடுத்துக் கொண்டாலும் முதலில் நாம் பார்ப்பது அதன் டிஸ்ப்ளேவாக தான் இருக்கும். அந்த வகையில் ஐபோன் வழங்கும் 4.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவை விட ஹானர் 8 கருவியின் 5.2 இன்ச் IPS டிஸ்ப்ளே சிறப்பானதாக இருக்கின்றது. டெக்ஸ்ட், இமேஜ், வீடியோ மற்றும் கேம்கள் அதிக துல்லியத்துடன் காணப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குறைந்த வெளிச்சத்திலும் தரமுள்ள புகைப்படங்கள்

குறைந்த வெளிச்சத்திலும் தரமுள்ள புகைப்படங்கள்

ஹானர் 8 கருவியில் ஆறு-லென்ஸ், வைடு-ஆங்கிள் டூயல் லென்ஸ் கேமரா செட்டப் மற்றும் இரண்டு 12 எம்பி சோனி சென்சார்களை பயன்படுத்துகின்றது. ஒன்று சாதாரண RGB சென்சார் ஆகும், இது நிறங்களைப் பிரதிபலிக்கும், மற்றொன்று monochrome சென்சார் ஆகும். இது பிரைட்னஸ் அளவைப் பிரதிபலிக்கும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஹானர் 8 மென்பொருள்கள் இரண்டு புகைப்படங்களை ஒன்றாக இணைத்துச் சிறப்பானதாக வெளிப்படுத்துகின்றது.

ஐபோன் 7 கருவியில் 12 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்

3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்

வாழ்க்கையை எளிமையாக மாற்றும் ஸ்மார்ட்போன் என்ற ரீதியில் ஹானர் 8 3.5 எம்எம் ஜாக் கொண்ட கருவியாக இருக்கின்றது. ஐபோன் 7 போன்று ஹெட்போன் ஜாக் இல்லாமல் பயனர்களுக்கு கூடுதல் செலவு வைக்கவில்லை. பாரம்பரியமிக்க 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மூலம் பயனர்கள் இசையை அனுபவிக்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேகமான ஆட்டோஃபோஸ்

வேகமான ஆட்டோஃபோஸ்

ஹானர் 8 கருவியில் இருக்கும் டூயல் லென்ஸ் கேமரா செட்டப் லேஸர் ஆட்டோபோகஸ் தொழில்நுட்பம் அதிவேகமாகச் செயல்படும் திறன் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 7 கருவியில் லேஸர் ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

ஐபோன் 7 போன்று இல்லாமல் ஹானர் 8 கருவியில் கைரேகை சென்சார் பல்வேறு இயக்கங்களைக் கொண்டுள்ளது. கருவியை அன்லாக் செய்வதோடு மட்டுமில்லாமல் புகைப்படம் எடுத்தல், நோட்டிபிகேஷன் பேனலை டிஸ்ப்ளே செய்தல், அழைப்புகளை ஏற்பது போன்றவற்றிற்கும் ஹானர் 8 கைரேகை சென்சாரை பயன்படுத்தலாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டூயல் சிம் கனெக்டிவிட்டி

டூயல் சிம் கனெக்டிவிட்டி

ஹானர் 8 கருவியில் இருக்கும் ஹைப்ரிட் சிம் கார்டு ஸ்லாட் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்த வழி செய்கின்றது. இதனால் ஹானர் 8 பயனர்கள் மற்றொரு கருவியை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

கைரேகை ஸ்கேனர் மூலம் கேலரி

கைரேகை ஸ்கேனர் மூலம் கேலரி

கேலரியில் இருக்கும் புகைப்படங்களை கேரைகே ஸ்கேனர் மூலம் இயக்க முடியும். ஹானர் 8 கருவியின் கேலரியில் புகைப்படங்களை தேட ஸ்மார்ட் கைரேகை ஸ்கேனர் பணியை எளிமையாக்குகின்றது. இதனால் டிஸ்ப்ளேவை தொடாமலே புகைப்படங்களை அலச முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூடுதல் மெமரி

கூடுதல் மெமரி

ஹானர் 8 கருவியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மல்டி டாஸ்கிங்

மல்டி டாஸ்கிங்

4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 8 கருவியில் ஒரே நேரத்தில் அதிகப்படியான ஆப்ஸ்களை கொண்டு மல்டி டாஸ்கிங் செய்ய முடியும். ஆப்பிள் ஐபோன் 7 கருவியில் 2ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ

வீடியோ

புகைப்படங்களை எடுக்க சிலர் மேனுவல் மோட் பயன்படுத்துவர். இதனால் அழகிய புகைப்படங்களை நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் படமாக்க முடியும். இதுவே ஹானர் 8 கேமராவில் வழங்கப்பட்டிருக்கும் டூயல் லென்ஸ் கேமரா ப்ரோ வீடியோ மோட் எனும் ஆப்ஷன் வழங்குகின்றது. இதனைக் கொண்டு வீடியோக்களையும் மேனுவல் மோடில் படமாக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
10 things that Honor 8 can do but an Apple iPhone 7 can’t

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X