ஆண்ட்ராய்டு போனில் கீபோர்டுக்கு பதில் ஜிபோர்டு: என்னென்ன அதிசயங்கள் பாருங்கள்

By Siva
|

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் கீபோர்டு ஒன்றை தனது பெயரில் அதாவது ஜிபோர்ட் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த செயலியின் வலது ஓரத்தில் கூகுள் சியர்ச் ஆப்சனும் இருக்கும். கூகுள் லோகோவுடன் வெளிவந்துள்ள இந்த ஜிபோர்டு சியர்ச் எஞ்சினில் நாம் தேடும் தகவல்களை அங்கிருந்தே நமது காண்டாக்ட்களுக்கு அனுப்பும் வசதியை உடையது.

ஆண்ட்ராய்டு போனில் கீபோர்டுக்கு பதில் ஜிபோர்டு

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் கிடைக்கும் இந்த கீபோர்டில் உள்ள சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்

கூகுளின் ஒருங்கிணைப்பு:

கூகுளின் ஒருங்கிணைப்பு:

கூகுளை அதன் வாடிக்கையாளர்களோடு ஒருங்கிணைப்பதில் இந்த ஜிபோர்டு வழிவகை செய்கிறது. G என்ற ஐகானை ஒரே ஒரு முறை டேப் செய்து கூகுளில் உள்ள எதைவேண்டுமானாலும் நீங்கள் விரைவாக கீபோர்ட் துணையின்றி தேடலாம்

மிக எளிதில் தகவல்களை பெறலாம்:

மிக எளிதில் தகவல்களை பெறலாம்:

இந்த ஜிபோர்டை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு தேவையான முக்கிய விபரங்களை மிக விரைவில் பெற்று கொள்ளலாம்.

விமான நேரம், புதிய கட்டுரைகள், ரெஸ்டாரெண்ட், தட்பவெப்ப நிலை உள்பட பல விஷயங்களை இந்த ஜிபோர்ட் வழியாக பெற்று கொள்வதோடு மிக எளிதில் மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம். ஜஸ்ட் காப்பி செய்து அருகில் உள்ள சேட்டில் பேஸ்ட் செய்து உங்கள் பிரியமானவர்களுக்கு எளிதில் தகவல்களை அனுப்பலாம்

கிளைட் டைப்பிங்:

கிளைட் டைப்பிங்:

ஒவ்வொரு எழுத்தாக நீங்கள் விரலை எடுத்து எடுத்து டைப் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஸ்வைப் டைப்பிங் என்று கூறப்படும் இந்த கிளைட் டைப்பிங் உங்கள் வேலையை மிக எளிதாக்குகிறது.

நீங்கள் நினைக்கும் வார்த்தையை கையை எடுக்காமல் ஸ்வைப் செய்தால் ஆச்சரியப்படும் வகையில் வார்த்தைகள் டைப் ஆகும். மேலும் இந்த டைப்பிங் எளிமையானது மட்டுமின்றி தவறில்லாமலும் இருக்கும்

GIF இமேஜ்கள் மற்றும் எமோஜிக்கள்:

GIF இமேஜ்கள் மற்றும் எமோஜிக்கள்:

நீங்கள் சேட்டிங்கில் இருக்கும் போது பொருத்தமான GIF இமேஜ்கள் மற்றும் எமோஜிக்கள் அனுப்ப வேண்டும் என்றால் இந்த ஜிபோர்டு உங்களுக்கு மிக எளிதில் உதவும். உங்களுக்கு எந்த மாதிரியான GIF இமேஜ்கள் மற்றும் எமோஜிக்கள் வேண்டும் என்பதை டைப் செய்தால் அதுசம்பந்தமானது உங்களுக்கு தோன்றும்

டெலிட் ஆன புகைப்படங்களை மீட்பது எப்படி.? (ஐபோன், ஆண்ட்ராய்டு)டெலிட் ஆன புகைப்படங்களை மீட்பது எப்படி.? (ஐபோன், ஆண்ட்ராய்டு)

டிராக்பேட்:

டிராக்பேட்:

உங்கள் மவுஸ் கர்சரை மிகச்சரியாக கண்ட்ரோல் செய்ய உங்க்ள் ஸ்பேஸ் பாரே உங்களுக்கு உதவும். ஸ்பேஸ்பாரின் உதவியால் உங்கள் கர்சரை வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ நகர்த்தலாம். மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட வார்த்தைகளை டெலிட் செய்ய வேண்டும் என்றால் பேக் ஸ்பேஸ்பாரை டேப் செய்தால் போதும்

மொழி பெயர்க்கவும் உதவும்:

மொழி பெயர்க்கவும் உதவும்:

கூகுளின் இந்த ஜிபோர்ட் நீங்கள் டைப் செய்யும் வார்த்தை மற்றும் வரிகளை ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கவும் உதவுகிறது. இதில் 90 வகையான மொழிகள் இருப்பதால் ஜி ஐகானை மட்டும் பயன்படுத்தி ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு நீங்கள் மிக எளிதாக மொழிபெயர்த்து கொள்ளலாம்

வாய்ஸ் டைப்பிங்:

வாய்ஸ் டைப்பிங்:

டைப்பிங் ஸ்பீடாக வராதவர்களுக்கு உதவுவது இந்த வாய்ஸ் டைப்பிங். இந்த ஜிபோர்ட் ஆப், வாய்ஸ் மூலம் வரும் கமாண்ட் வார்த்தைகளை டெக்ஸ்ட் ஆக மாற்றும் தன்மை உடையது. மேலும் வலது புறத்தில் உள்ள மைக்ரோபோன் ஆப்சனையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

உங்கள் தனித்தன்மையையும் பெறலாம்

உங்கள் தனித்தன்மையையும் பெறலாம்

உங்களுக்கு தேவையான தனித்தன்மை உடைய சொற்களை இணைக்க வேண்டுமானாலும் இதில் வழிவகை உள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Settings > Language & Input > Gboard சென்று அதில் உள்ள Personal Dictionary என்ற ஆப்சனை கிளிக் செய்தால் போதும்

தீம்ஸ்களை மாற்ற வேண்டுமா?

தீம்ஸ்களை மாற்ற வேண்டுமா?

உங்களுக்கு வெள்ளை நிறத்திலேயே கீபோர்டை பார்த்து பார்த்து போரடித்துவிட்டதால்? உடனே உங்கள் கீபோர்டின் கலரை மாற்றி கொள்ளலாம். அதற்கும் இதில் வழிவகை உள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஜி சிம்பலை செலக்ட் செய்து அதில் உள்ள தீம்ஸ்களில் ஒன்றை செலக்ட் செய்யவும்

ஒரே கையில் டைப் செய்ய வேண்டுமா?

ஒரே கையில் டைப் செய்ய வேண்டுமா?

இரண்டு கைகளிலும் டைப் செய்ய உங்களால் முடியவில்லை என்றால் ஒரே கையில் டைப் செய்யும் ஆப்சனை நீங்கள் மிக எளிதில் மாற்றி கொள்ளலம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது G சிம்பலை க்ளிக் செய்து அதில் தோன்றும் ஒரு கை டைப்பிங் ஆப்சனை செலக்ட் செய்தால் போதும்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Last year, Google launched keyboard dubbed as Gboard that has a Google search bar built right into the app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X