விசேஷ அம்சங்களுடன் இந்த ஆண்டு அறிமுகமான பத்து ஸ்மார்ட்போன்கள்.!

அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் முற்றிலும் புதிய அம்சங்கள் கொண்டிருந்த பத்து ஸ்மார்ட்போன்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

|

ஸ்மார்ட்போன் ப்ரியர்களுக்கு 2018 ஆம் ஆண்டு அதிக சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது. பல்வேறு ஸ்மார்ட்போன் பிரான்டுகள் தங்களது சாதனங்களில் இதுவரை நாம் கண்டிறாத அம்சங்களை அறிமுகம் செய்துள்ளன. இவை நம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மாற்றியமைக்கும் வகையில் இருந்துள்ளன.

அற்புத அம்சங்களுடன் அறிமுகமான பத்து ஸ்மார்ட்போன்கள்.!

அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் முற்றிலும் புதிய அம்சங்கள் கொண்டிருந்த பத்து ஸ்மார்ட்போன்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

விவோ நெக்ஸ் எஸ் கேமரா

விவோ நெக்ஸ் எஸ் கேமரா

விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் உலகின் பாப்-அப் ரக கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக அமைந்தது. இதன் மூலம் அந்நிறுவனம் நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவை அதிகரித்தது. பொறியியல் ரீதியாக நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் அதிநவீனத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இது ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவோருக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

ஒப்போ ஆர்17 ப்ரோ சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் வசதி

ஒப்போ ஆர்17 ப்ரோ சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் வசதி

இந்த தொழில்நுட்பம் நாம் சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் வழிமுறையை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் இருக்கிறது. சூப்பர்VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஒப்போ நிறுவனத்தின் அதிவேக சார்ஜ் செய்யும் வழிமுறைக்கான பெயராக இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரியை 0 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 40 நிமிடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு 50 வாட் சார்ஜரை பயன்படுத்தி இவ்வாறு சார்ஜ் செய்ய முடிகிறது. சூப்பர்VOOC ஃபிளாஷ் சார்ஜ் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனாக ஒப்போ ஆர்17 ப்ரோ இருக்கிறது.

ஹூவாய் பி20 ப்ரோ 3எக்ஸ் ஆப்டிக்கல் சூம் வசதி

ஹூவாய் பி20 ப்ரோ 3எக்ஸ் ஆப்டிக்கல் சூம் வசதி

3எக்ஸ் ஆப்டிக்கல் சூம் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ஹூவாய் பி20 ப்ரோ இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருப்பதால், அதிக தரமான புகைப்படங்களை தூரமாக இருந்தும் எடுக்க முடிகிறது. இதன் முக்கிய அம்சமாக தூரத்தில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்களின் தரம் குறையாமல் இருப்பது தான் எனலாம். ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் 40 எம்.பி. சென்சார் மற்றும் எஃப்/1.8 அப்ரேச்சர் செட்டப் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ஹூவாய் பி20 ப்ரோ இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) நான்கு கேமரா செட்டப்

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) நான்கு கேமரா செட்டப்

நான்கு கேமரா செட்டப் அதாவது 24 எம்.பி. வழக்கமான ஆர்.ஜி.பி. சென்சார், 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 (2018) இருக்கிறது. நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டு இருப்பதால் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஒரே புகைப்படத்திற்கு நான்கு கோணங்களை வழங்குகிறது.

சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3 ஸ்லைடர் போன்

சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3 ஸ்லைடர் போன்

சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் அதிநவீன ஸ்லைடர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ வழங்கப்பட்டு இருக்கிறது. அதுவும் ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா மற்றும் இதர சென்சார்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இவ்வாறு செய்ய முடிகிறது.

ஐபோன் எக்ஸ்.எஸ். இ-சிம் வசதி

ஐபோன் எக்ஸ்.எஸ். இ-சிம் வசதி

இ-சிம் தொழில்நுட்பம் மூலம் இரட்டை சிம் வசதி கொண்ட முதல் ஐபோன் மாடலாக ஐபோன் எக்ஸ்.எஸ் அமைந்திருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் ஒற்றை சிம் கார்டு மற்றொன்றிற்கு இ-சிம் தொழிலநுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதே தொழில்நுட்பம் ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.ஆர். உள்ளிட்ட மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி

ஹூவாய் மேட் 20 ப்ரோ ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி

ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ஹூவாய் மேட் 20 ப்ரோ இருக்கிறது. இதில் ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் பயன்படுத்தியே வாடிக்கையாளர்கள் மற்ற சாதனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். எனினும், இவ்வாறு செய்யும் சார்ஜ் ஏற்ற வேண்டிய சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அந்த வகையில் ஹூவாய் மேட் 20 ப்ரோ பவர் பேங்க் போன்றும் செயல்படும்.

 ரோக் போன் ஓவர்க்ளாக்டு பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்

ரோக் போன் ஓவர்க்ளாக்டு பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்

உலகில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸரை அதிகபட்சம் 2.96 ஜிகாஹெர்ட்ஸ் வரை கஸ்டமைஸ் செய்யப்பட்ட சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரோக் போன் இருக்கிறது. இது வழக்கமான ஸ்னாப்டிராகன் 845 பிராசஸரை விட சிறிதளவு வேகமாக இயங்கும். இதன்மூலம் ரோக் போனில் கேமிங் மற்றும் சி.பி.யு. திறன் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது மேம்பட்டு இருக்கும்.

ரெட் ஹைர்டஜன் ஒன் ஸ்மார்ட்போனில் 3டி டிஸ்ப்ளே வசதி

ரெட் ஹைர்டஜன் ஒன் ஸ்மார்ட்போனில் 3டி டிஸ்ப்ளே வசதி

ரெட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரெட் ஹைட்ரஜன் ஒன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஹாலோகிராஃபிக் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் 3டி தரவுகளை எவ்வித கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்றி பார்த்து ரசிக்க முடியும்.,

மோட்டோ இசட்4 5ஜி மாட்

மோட்டோ இசட்4 5ஜி மாட்

5ஜி நெட்வொர்க் வசதியை ஒத்துழைக்கும் முதல் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலாவின் மோட்டோ இசட் 4 இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும் அறிமுகமாகும் போது இந்த ஸ்மார்ட்போனுடன் 5ஜி மோட்டோ மாட் வழங்கப்படும் என்றும், இது 5ஜி நெட்வொர்க் வசதியை வழங்கும் என தெரிகிறது.

முடிவுரை:

முடிவுரை:

2018 ஆம் ஆண்டு முற்றிலும் புதுவித சிறப்பம்சங்களுடன் அறிமுகமான பத்து ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன் எது? கமென்ட்களில் தெரிவிக்கவும்.

Best Mobiles in India

English summary
10 smartphones with unique innovations launched in 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X