டக்கரான கேமரா கொண்ட ஹானர் 5சி.!!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவு கருவியான ஹானர் 5சி குறைந்த விலையில் மற்ற கருவிகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்தக் கருவியின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன. இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அதாவது ரூ.10,999க்கு இந்தக் கருவி வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்த விலையிலும் சக்தி வாய்ந்த பிராசஸரான கிரின் 650 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 8 எண்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 5சி கேமராவுடன் எல்இடி பிளாஷ், PDAF, நைட் மோடு மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பயனர்கள் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் சிறப்பான செல்பீ எடுக்க ஏதுவாக 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் 5சி கேமரா மூலம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பார்த்து அதன் சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்...

மலர்
இந்தப் புகைப்படத்தில் மலர்கள் மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளதைப் பார்க்க முடியும்.

தெளிவு
கேமரா தரத்தை நிரூபிக்கும் மற்றும் ஓர் புகைப்படம்.

நிறம்
ஹானர் 5சி கேமரா நிறங்களைத் துல்லியமாக பதிவு செய்வதோடு அவற்றை மிகவும் தெளிவாகவும் வழங்குகின்றது.

காட்சி
இந்தப் படத்தில் பல்வேறு நிறங்களும் மிகவும் அற்புதமாகப் பதிவாகியுள்ளது.

வெளிச்சம்
குறைந்த வெளிச்சத்திலும் புகைப்படம் அழகாகவே இருக்கின்றது.

ஃபோகஸ்
புகைப்படம் எடுக்கும் போது அதிவேகமாக ஃபோகஸ் ஆவதோடு பயனர்களுக்கு அழகான புகைப்படத்தையும் வழங்குகின்றது.

சூழல்
எவ்வித சூழலிலும் அழகான புகைப்படங்களை வழங்கும்.

குளோஸ் அப் போட்டோ
மிகவும் அருகாமையில் படம் பிடிக்கும் போதும் பொருட்களை மிகவும் தெளிவாக பிரதிபலிக்கும்.

படம்
லாங் ஷாட் எடுக்கவும் ஹானர் 5சி கேமரா சிறப்பானதாக இருக்கும்.

உருவப்படம்
உருவப்படங்களை எடுக்கவும் ஹானர் 5சி அற்புதமாக வேலை செய்கின்றது.


Click it and Unblock the Notifications