இலவசமாக கொடுத்தால் கூட ஐபோனை வாங்காத ஆண்ட்ராய்டு வாசிகள், ஏன்.?

By Siva
|

சில விஷயங்கள் மாறாமல் வாழையடி வாழையாக அடுத்த தலைமுறைக்கும் சென்று கொண்டே இருக்கும். அவற்றில் ஒன்று தான் ஆண்ட்ராய்டு போன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் வைத்திருப்பது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டாலும் பெரும்பான்மையான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயனாளிகள் ஐபோனுக்கு மாறுவதில்லை. அதற்கு முக்கிய 10 காரணங்களை தற்போது பார்ப்போம்

அதிகளவிலான தேர்வு செய்யும் வாய்ப்புகள்

அதிகளவிலான தேர்வு செய்யும் வாய்ப்புகள்

ஐபோன்கள் என்றாலே பெரும்பாலும் ஆப்பிள் ஐபோன் என்ற ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும் நிலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சாம்சங், HTC, சோனி, மோடோரோலா உள்பட பல நிறுவனங்களின் புதுப்புது மாடல்கள் நம் கண் முன்னே உள்ளது. அதுமட்டுமின்றி டூயல் சிம், சுழலும் கேமிரா உள்பட பல வசதிகள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ளது.

விலையை நீங்கள் முடிவு செய்யலாம்:

விலையை நீங்கள் முடிவு செய்யலாம்:

ஆண்ட்ராய்ட் போனை பொருத்தவரையில் ஏகப்பட்ட விலையில் ஏகப்பட்ட மாடல்கள் கிடைப்பதால் எந்த பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். உங்களுடைய பட்ஜெட்டிலேயே அதிகமான மாடல்கள் கிடைக்கும். அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்

 தனிப்பட்ட விருப்பத்தை பொருத்து தேர்வு செய்யும் வசதி

தனிப்பட்ட விருப்பத்தை பொருத்து தேர்வு செய்யும் வசதி

ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். சிலருக்கு கேமிரா, சிலருக்கு ஹார்ட்வேர், சிலருக்கு சாப்ட்வேர், சிலருக்கு அதிக மெமரி, சிலருக்கு ஒரு குறிப்பிட்ட ஓஎஸ் என எந்தவகையான தனிப்பட்ட தேவை என்றாலும் அதற்கென தனி மாடல்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஹார்ட்வேர்

ஹார்ட்வேர்

ஆண்ட்ராய்ட் போனில் ஹார்ட்வேரை பொருத்தவரை விலைக்கு தகுந்தவாறு அதன் அமைப்புகள் இருக்கும். உயர் ரக பிராஸசர், அதிக ரேம், அதிகளவிலான பேட்டரி கெப்பாசிட்டி, மேலும் வாட்டர் ரெசிஸ்டெண்ட், பிங்கர்பிரிண்ட் வசதி, சார்ஜ் வேகமாகும் வகையில் வயர்லெஸ் சார்ஜர் உள்பட் பல்வேறு வகையான ஹார்ட்வேர்களை நமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யலாம்

கூகுள் பிளே ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோர்:

ஆண்ட்ராய்ட் போன் என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது செயலிதான். கூகுள் பிளே ஸ்டோரில் கோடிக்கணக்கில் செயலிகள் கொட்டிக்கிடப்பதால் உங்களுக்கு தேவையான செயலிகளை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் ஒரு டெவலப்பாராக இருந்தால் நீங்களே ஒரு செயலி செய்து அதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவு செய்து கொள்ளலாம்

விட்ஜெட்டுக்கள்

விட்ஜெட்டுக்கள்

ஆண்ட்ராய்டு போன்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் விட்ஜெட்டுக்கள். உங்களுக்கு தேவையான அனனத்து வசதிகளையும் விட்ஜெட்டில் பெற்று கொள்ளலாம்.

 ஒரே நேரத்தில் பல பணிகள்

ஒரே நேரத்தில் பல பணிகள்

மல்டி டேஸ்க் என்று கூறப்படும் ஒரே நேரத்தில் பல பணிகள் என்பது ஆண்ட்ராய்ட் போனுக்கு மட்டுமே உரிய ஒரு வசதி. ஒரே நேரத்தில் இரண்டு செயலிகள் பயன்படுத்துவது உள்பட பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளது.

 புதுப்புது வெளியீடுகள்

புதுப்புது வெளியீடுகள்

ஒரே செயலி அல்லது ஒரே விதமான பயன்பாடு ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சலித்துவிடும். ஆனால் ஆண்ட்ராய்ட் போன் பயனாளிகளுக்கு அந்த கவலை இல்லை. கூகுள் பிளே ஸ்டோரில் தினமும் நூற்றுக்கணக்கான புதுப்புது செயலிகளின் வெளியீடுகளை பயன்படுத்தி மகிழலாம்

சாப்ட்வேர்களை மாற்றும் வசதி

சாப்ட்வேர்களை மாற்றும் வசதி

ஒரு ஸ்மார்ட்போனின் வாரண்டி முடிந்தவுடன் அதில் உள்ள முக்கிய சாப்ட்வேர்களை எளிதில் மாற்றி கொள்ளலாம். இண்டர்நெட்டில் பல மாற்று சாப்ட்வேர்கள் உள்ளது. அவற்றை பயன்படுத்தலாம். மேலும் ஸ்மார்ட்போன்களை ரூட் செய்யும் வசதியும் உண்டு

கூகுள் நெள

கூகுள் நெள

வாய்ஸ் மூலம் உத்தரவிட்டு ஒரு பணியை முடித்து கொள்ளும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் செயலியான கூகுள் நெள ஆண்ட்ராய்ட் போன்களுக்கே உரியது. ஒரே ஒரு டேப்பில் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

Best Mobiles in India

Read more about:
English summary
Some debates can be carry forwarded for days and years, yet the end result will not be met. Once such topic is Android or iOS!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X