Home
Mobile

விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!

By Saravana Rajan

ஸ்மார்ட்போன்களின் டிசைனும், தொழில்நுட்பமும் நித்தமும் மேம்பட்டு வருகின்றன. அந்த வகையில், நவீன யுக அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ள விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் சிறந்த பிரிமீயம் மாடலாக மாறி இருக்கிறது. கடந்த மாதம் இதன் 8 ஜிபி ரேம் மாடலும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான 10 முக்கிய காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. முழுமையான திரை

01. முழுமையான திரை

ஸ்மார்ட்போனில் முழு திரை அளவை வழங்குவதற்கான முயற்சிகளுக்கு இப்போது வெற்றி கிட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் முழு திரை அளவுடன் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் கூட செல்ஃபீ கேமரா திரையில் இடத்தை பிடித்துக் கொள்வது உறுத்தலாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் விதத்தில், பாப் அப் செல்ஃபீ கேமராவுடன் முழு திரை அளவுடன் இந்த விவோ வி15 போன் வந்துள்ளது. இதனால், இதன் திரை அமைப்பு மிக கவர்ச்சியாக உள்ளது.

02. திரை பாதுகாப்பு அம்சம்

02. திரை பாதுகாப்பு அம்சம்

இந்த ஸ்மார்ட்போனில் 1080×2340 பிக்சல் துல்லிய தரத்தை வழங்கும் 6.53 அங்குல முழு எச்டி சூப்பர் அமோலெட் திரை அமைப்பு, 5 அடுக்குகள் கொண்ட கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, போனின் பாடி மற்றும் திரைக்கு இடையிலான விகிதமானது 90.95 சதவீதமாக இருப்பதும் இதன் மதிப்பை தூக்கிப் பிடிக்கும் விஷயங்கள். வீடியோக்களையும், வீடியோ கேம் ஆடுவதிலும் ஓர் உன்னதமான உணர்வை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்பதில் ஐயமில்லை.

03. பாப் அப் கேமரா

03. பாப் அப் கேமரா

திரையில் நெருடல் இல்லாதவாறு, இதன் செல்ஃபீ கேமரா தேவைப்படும்போது வெளியில் வரும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் வந்துள்ளது. இதில், 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மிக துல்லியமான உயரிய செல்ஃபீக்களை எடுக்க முடியும். அத்துடன், முகத்தை அழகாக காட்டுவதற்கான பல்வேறு நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களையும் பெற்றுள்ளது.

04. பின்புற கேமரா

04. பின்புற கேமரா

சிறந்த துல்லியத்தில் உயரிய படங்களை எடுப்பதற்கு வசதியாக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் துல்லியத்தில் படம் எடுக்கும் திறன் வாய்ந்த மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 25 மெகாபிக்சல் திறன் கொண்ட முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் திறன் வாய்ந்த இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் துல்லியத்தை தரும் சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா ஆகியவை சேர்ந்து அற்புதமான படங்களை எடுக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் வைடு ஆங்கிள் கேமரா 120 டிகிரி வரையில் படம் எடுக்கும் திறன் வாய்ந்தது.

05. செயல்திறன்

05. செயல்திறன்

புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 மற்றும் 2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் பிராசஸர் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸருடன், 6 ஜிபி ரேம் அல்லது 8 ஜிபி ரேம் இணைந்து அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தும். மேலும், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபன்டச் ஓஎஸ் 9 கொடுக்கப்பட்டு இருப்பதும் இதன் மதிப்பை உயர்த்தும் விஷயம். இந்த மாடலில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டு மூலமாக 256 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.

06. வீடியோ கேம்

06. வீடியோ கேம்

வீடியோ கேம் விளையாடும்போது இதன் டியூவல் டர்போ தொழில்நுட்பமானது தங்கு தடையில்லாத சீரான அனுபவத்தை தரும். குறிப்பாக, பப்ஜி போன்ற வீடியோ கேம்களை ஆடுவதற்கான சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கூறலாம்.

07. செயற்கை நுண்ணறிவு திறன்

07. செயற்கை நுண்ணறிவு திறன்

இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏராளமான வசதிகளை வழங்குகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான வசதிகளை பெறுவதற்கான போனின் பக்கவாட்டில் ஸ்மார்ட் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

08. திறன் வாய்ந்த பேட்டரி

08. திறன் வாய்ந்த பேட்டரி

புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3,700 எம்ஏஎச் திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பங்கள் மூலமாக பேட்டரி திறன் செம்மையான முறையில் செலவழிக்கப்படுகிறது. எனவே, பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போகும் பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

09. டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜர்

09. டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜர்

விவோ வி15 ஸ்மார்ட்போனில் டியூவல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை 15 நிமிடங்களில் 24 சதவீத அளவு சார்ஜ் ஏற்ற முடியும் என்பதுடன், ஒரு மணிநேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

10. இதர அம்சங்கள்

10. இதர அம்சங்கள்

விவோ வி15 ஸ்மார்ட்போனில் இரண்டு 4ஜி சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி, ஃபேஸ் அன்லாக் மற்றும் விரல் ரேகை மூலமாக திறப்பதற்கான வசதிகள் உள்ளன. புளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. ஃப்ராஸன் புளூ, கிளாமர் ரெட் மற்றும் அக்வா புளூ ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.26,990 விலையிலும், 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.28,990 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்குவோருக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. நடுத்தர விலை கொண்ட பிரிமீயம் ஸ்மார்ட்ஃபோன்களில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
10-reasons-buy-vivo-v15-pro-smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X