Subscribe to Gizbot

இன்று இந்திய வெளியீடு : மோட்டோ எக்ஸ் 4-ஐ நம்பி வாங்க 10 காரணங்கள்.!

Written By:

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் என்றால், உங்களுக்கு நல்ல ஒரு செய்தி இருக்கிறது. லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோட்டோரோலா நாளை இந்தியாவில் தனது சமீபத்திய மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இன்று இந்திய வெளியீடு : மோட்டோ எக்ஸ் 4-ஐ நம்பி வாங்க 10 காரணங்கள்.!

இந்தியாவில் திடமான நற்பெயரைக் கொண்டுள்ள மோட்டோரோலா கருவிகள் அதன் இடைப்பட்ட மற்றும் மலிவான விலை நிர்ணயத்திற்கும் பெயர்போன நிறுவனமாகும். கிட்டத்தட்ட அனைத்து விலை அடைப்புக்குறிக்குள்ளும் (சூப்பர் காஸ்ட் விலைப்பிரிவை தவிர) நீங்கள் குறைந்தது ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போனையாவது காணலாம்.

சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்று அறிமுகமாகும், ஒரு இடைப்பட்ட ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ எக்ஸ் 4 கருவியை நமபி வாங்கலாமா.? வேண்டாமா என்பதை கீழ்த்தொகுக்கப்பட்டுள்ள 10 விடயங்களை வைத்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இந்தியாவில் எந்த பதிப்பு.?

இந்தியாவில் எந்த பதிப்பு.?

மோட்டோ எக்ஸ் 4 ஆனது பேர்லாந்தில் நிகழ்த்த ஐஎஃப்ஏ 2017-ல் தொடங்கப்பட்டது. பின்னர், நிறுவனம் அமெரிக்காவிற்கான மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு ஒன் பதிப்பை அறிமுகப்படுத்தியது. இப்போது இந்தியாவில் எந்த பதிப்பு வருகிறதென்பது நாளை உறுதி செய்யப்படும்.

டிஸ்பிளேவின் அளவு மற்றும் இதர பாதுகாப்பு.?

டிஸ்பிளேவின் அளவு மற்றும் இதர பாதுகாப்பு.?

அனோடைஸ்டு அலுமினிய சட்டம் மற்றும் 3டி பின்புற முக்கோண வடிவமைப்புடன், 1080 × 1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட இதன் 5.2 இன்ச் முழுஎச்டி எல்டிபிஸ் டிஸ்பிளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது.

செயலி.?

செயலி.?

இந்த சாதனம் அட்ரெனோ 508ஜிபியூ உடன் இணைந்த 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராஸசர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை

3 ஜிபி அளவிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ள மோட்டோ எக்ஸ்4-ன் சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளதா.?

பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளதா.?

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் இக்கருவியானது, மற்ற மோட்டோ கைபேசிகளைப் போலவே பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதன் 15வாட் டர்போசார்ஜர் ஆனது வெறும் 15 நிமிடங்களில் 6 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குமென் நிறுவனம் கூறியுள்ளது.

ஐபி 68 சான்றிதழின் பயன் என்ன.?

ஐபி 68 சான்றிதழின் பயன் என்ன.?

மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் ஆனது ஐபி 68 சான்றிதழ் கொண்டுள்ளது. அதாவது சுமார் 30 நிமிடங்களுக்கு 1.5 மீட்டர் வரை நீரில் மூழ்கலாம், மேலும் இந்த சான்றிதழ் தூசி ஆதாரமும் வழங்கும்.

இதன் டூயல் கேமரா அப்படி என்னதான் கொண்டுள்ளது.?

இதன் டூயல் கேமரா அப்படி என்னதான் கொண்டுள்ளது.?

மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமே, இரட்டை-ஒளி நிலைகளில் வேகமாக போகஸ் செய்யக்கூடிய, இரட்டை ஆட்டோபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட அதன் 12எம்பி+8எம்பி டூயல் ரியர் கேமரா தான்.இதன் 12எம்பி கேமராவானது இரட்டை ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம், எப்/ 2.0 மற்றும் 1.4யோஎம் சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மற்றொரு 8எம்பி ரியர் கேமராவானது 120 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ், எப் / 2.2 துளை மற்றும் 1.12யூஎம் பிக்சல் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள் பொருள்களையும் அடையாளம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு வணிக அட்டையை அடையாளம் கண்டு, ஒரு பயனரின் தொடர்புகளுடன் அந்த தகவலை சேர்க்கவும் முடியும்.

செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா.?

செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா.?

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், ப்ளாஷ் கொண்ட 16எம்பி கேமரா உள்ளது. மேலும் இதன் கேமரா பயன்பாட்டில் உள்ள "பேஸ் பில்டர்ஸ்" ஆனது ஸ்னாப்சாட், இன்ஸ்ட்டாகிராம் போன்ற புகைப்பட பில்டர்களை பயனர்களுக்கு வழங்கும்.

என்னென்ன சென்சார்களை கொண்டுள்ளது.?

என்னென்ன சென்சார்களை கொண்டுள்ளது.?

அளவீட்டில் 148.35 x 73.4 x 7.99 மிமீ, 9.45 மிமீ கேமரா பம்ப் மற்றும் 163 கிராம் எடை கொண்டுள்ள இக்கருவி மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் அமேசான் அதன் அலெக்ஸா அனுபவத்தையும் சேர்த்துள்ளது. ஒற்றை சிம் ஸ்மார்ட்போன் ஆன இதன் சென்சார்களை பொறுத்தமட்டில் கைரேகை ரீடர், கிராவிட்டி, ப்ராக்சிமிட்டி, ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னட்டோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் சென்சார் ஹப் ஆகியவைகளை தன்னுள் கொண்டுள்ளது.

என்ன விலை நிர்ணயம்.?

என்ன விலை நிர்ணயம்.?

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலைநிர்ணயம் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இருப்பினும், இணையத்தில் சுற்றிவரும் மோட்டோ எக்ஸ்4 சில்லறை பெட்டியின் படம் ஒன்று ரூ.23,999/- என்பதை மிகத்தெளிவாக காட்டுகிறது. ஆக, ஒரு குறைந்த விலை நிர்ணயத்தையும் எதிர்பார்க்கலாம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
10 Reasons to buy Moto X4, launching in India tomorrow. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot