Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.22,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 4D வைப்ரேஷன்.. எந்த போன்?

பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் கேமரா, 4டி வைப்ரேஷன், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G) போன் நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது.

விவோ டி2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T2 Pro 5G Specifications): இந்த விவோ போனில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 4D வைப்ரேஷன்.. எந்த போன்?

அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, டிஸ்பிளே குவாலிட்டி பிரீமியமாக இருக்கும். இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வருகிறது.

அதோடு ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் உள்ளது. கேமிங் பிரியர்கள் விரும்பும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 4டி வைப்ரேஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது. எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்படவில்லை.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 4D வைப்ரேஷன்.. எந்த போன்?

இந்த விவோ போனில் சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அரா (Aura) ஃபிளாஷ் LED Light) வருகிறது. ஸ்போர்ட் மோட் (Sports Mode) என்னும் பிரத்யேக பீச்சர் கொண்டுள்ளது.

16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி போனில் 66W ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் கொண்டிருக்கிறது. ஸ்லிம் டிசைனில் 7.36 தடிமன் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப் - சி ஆடியோ மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த விவோ டி2 ப்ரோ போனில் நியூ மூன் பிளாக் (New Moon Black) மற்றும் டூன் கோல்டு (Dune Gold ) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த விவோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.2000 உடனடி தள்ளுபடியில் விற்பனையாகிறது.

இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.21,999 விலையில் வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டில் பிரீமியம் கர்வ்ட் டிஸ்பிளே, பக்கா சிப்செட் போன் வேண்டுமானால், இதை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Precent Discount on Vivo T2 Pro 5G in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X