Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3 ஃபிளாஷ்.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அண்டர் வாட்டர் சூட் கொண்ட சோனி சென்சார் கேமரா, நைட் போட்டோகிராபிக்காக 3 ஃபிளாஷ் எல்இடி, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் கலர்-சேஞ்ச் பேனலுடன் வெளியாகிய ரியல்மி 14 ப்ரோ 5ஜி (Realme 14 Pro 5G) போனின் விற்பனையானது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கி இருக்கிறது.

பிரீமியம் கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்களுடன் பட்ஜெட்டில் வெளியாகியதால், இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனின் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. ஏனென்றால், அண்டர் வாட்டர் சூட் (Under Water Shoot) கொடுக்க IP69 வாட்டர்ப்ரூஃப் மட்டுமல்லாமல், IP66 டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் IP68 ஃபிரஷ் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்! பட்ஜெட்ல SONY கேமரா.. 3 ஃபிளாஷ்.. 6000mAh போன்!

ரியர் கேமராவில் டிரிபிள் ஃபிளாஷ் எல்இடி வருகிறது. இதற்கு ஏற்ப நைட் போர்ட்ராய்டு (Night Portrait) பீச்சர் இருக்கிறது. பிரத்யேக லைவ் போட்டோ (Live Photo), ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0 (Ultra Clarity 2.0) மற்றும் ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் மாலி ஜி615 ஜிபியு சப்போர்ட் உள்ளது.

இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட டைமன்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி (Dimensity 7300 Energy) சிப்செட் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிசைனில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்ட 6.83 இன்ச் (2392 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் இந்த டிஸ்பிளேவில் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் வழக்கமான ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்கள் இருக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.

டிரிபிள் ஃபிளாஷ் எல்இடி இருந்தும், ரியர் கேமரா டூயல் செட்டப் மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் மற்றும் பிரீமியம் அவுட்புட் கொடுக்க சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் உள்ளது.

இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனானது கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி ஜிடி மோட் (GT Mode) மற்றும் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொடுக்கிறது. கேமிங் பேக்கப் கொடுக்க 6000mAh பேட்டரி மற்றும் பூஸ்ட் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் டூயல்-மைக் (Dual-mic) இந்த போனில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் விற்பனையில் மல்டிபிள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு வந்துள்ளது. ஆகவே, ரூ.24,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.22,999 பட்ஜெட்டிலும், ரூ.26,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.24,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Percent Discount Realme 14 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X