அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் எப்போதுமே தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் விவோ நிறுவனத்தின் 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். எனவே ரூ.21,999 இருந்தால் போதும் விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும். இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ டி2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (vivo T2 Pro 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இந்த போனில் உள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி போனுக்கு கிடைக்கும்.
குறிப்பாக கேமிங் பயனர்களை கவரும் வகையில் விவோ டி2 ப்ரோ 5ஜி போனுக்கு மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி(Full HD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ டி2 ப்ரோ 5ஜி. எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதன் ரியர் கேமரா அருகில் அரோரா லைட் (Aura light)ஆதரவு உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவு இதில் உள்ளது.

4600எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக 22 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது. IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த போன்.
டைப் - சி ஆடியோ, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர், மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








