Home
Mobile

பொளந்து கட்டுது ஆர்டர்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா ஸ்லிம் பாடி மட்டுமல்லாமல், சூப்பர் அமோலெட் பிளஸ் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்56 (Samsung Galaxy M56) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.3,000 டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்56 அம்சங்கள் (Samsung Galaxy M56 Specifications): இந்த சாம்சங் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), 1200 எச்பிஎம் மோட் உள்ளது.

பொளந்து கட்டுது ஆர்டர்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

மெட்டல் கேமரா டெக்கோ (Metal Camera Deco) மற்றும் மெட்டாலிக் பினிஷிங் மிடில் ஃபிரேம் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்ஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சாம்சங் ஒன்யுஐ 7 (Samsung One UI 7) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் கொடுக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 போனில் சாம்சங் நிறுவனத்தின் சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) மற்றும் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) வருகிறது.

கேமராவில் வழக்கம் போல டிரிபிள் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி, 10X டிஜிட்டல் ஜூமிங், 4K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 போனில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மிட்-ரேஞ்ச் சாம்சங் மாடலில்களில் கிடைக்கக்கூடிய 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மட்டுமல்லாமல், கைரோ, ஜியோமேக்னட்டிக், லைட் உள்ளிட்ட சென்சார்கள் வருகின்றன.

7.2 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் மட்டுமல்லாமல், 180 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆகவே, ஓரளவு பெரிய டிஸ்பிளே கொண்ட காம்பாக்ட் மாடலாக எதிர்பார்க்கலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 போனில் லைட் கிரீன் (Light Green) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இப்போது, விலைக்கு செல்வோம்.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.3000 டிஸ்கவுண்ட் போக ரூ.24,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் வருகிறது.

Best Mobiles in India

English summary
10 Percent Discount on Samsung Galaxy M56 With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X