பிளிப்கார்ட் அதிருது.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
லேட்டஸ்ட் சாம்சங் போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பக்காவான நேரம் வந்துவிட்டது. சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் டெக்னாலஜி கேமரா, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல் 6 ஜெனரேஷன் ஓஸ் அப்டேட்களை கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி (Samsung Galaxy A26 5G) போனுக்கு பக்காவான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, ஆர்டர் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.
இந்த சாம்சங் போனுக்கு 6 ஜெனரேஷன் ஓஸ் அப்டேட்ஸ், 6 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் மட்டுமல்லாமல் கிளாக்ஸ் வால்ட் (Knox Vault) சப்போர்ட் கிடைக்கிறது. முந்தைய ஏ சீரிஸ்களைவிட பெரிய வேப்பர் சேம்பர் (Vapour Chamber) வருகிறது. IP67 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. இப்போது, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி போன்ற முழு பீச்சர்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A26 5G Specifications): இந்த கேலக்ஸி போனிலும் ஏ சீரிஸ்களில் வழக்கமாக கிடைக்கும் 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஆனால், இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு பேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. முன்பு பார்த்த ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) கிடைக்கிறது. இந்த சாம்சங் போனில் இன்-ஹவுஸ் சிப்செட்டான ஆக்டா கோர் என்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) கிடைக்கிறது.
2 டிபி எக்ஸ்பான்டபிள் மெமரி சப்போர்ட் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது.
மெயின் கேமராவில் 10X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 4K வீடியோ ரெக்கார்டிங், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை (Side-mounted fingerprint Sensor) கொடுக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. அவ்சம் பிளாக், அவ்சம் மின்ட், அவ்சம் ஒயிட் அல்லது அவ்சம் பீச் ஆகிய 4 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. அதுவே 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆக உள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ஆர்டர் செய்தால் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.22,999 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். அதிக ஓஎஸ் அப்டேட்களுடன் சாம்சங் போன் வேண்டுமானால், இந்த பட்ஜெட் மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.


Click it and Unblock the Notifications








