Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ரெட்மி பிரியர்களும் பிளிப்கார்ட்டில் குவியும்படியான பட்ஜெட்டில் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G) போன்கள் 200 எம்பி கேமராவுடன் விற்பனைக்கு வந்துள்ளன.

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro 5G Specifications): இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல 200MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டுள்ளது.

200 எம்பி (OIS) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

5100mAh பேட்டரி கொண்டிருக்கிறது. ஆர்டிக் ஒயிட், கோரல் பர்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 8ஜிபி+128ஜிபி மாடலின் விலை ரூ.25,999ஆகவும், 8ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 12ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus 5G Specifications): இந்த ப்ரோ பிளஸ் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200-Ultra 4nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் மாலி ஜி610 கிராபிக்ஸ் வருகிறது.

பட்ஜெட்ல 200MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்த போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ப்யூசன் ஒயிட் (Fusion White), ப்யூசன் பர்பிள் (Fusion Purple) மற்றும் ப்யூசன் பிளாக் (Fusion Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் ப்ரோ மாடலை போலவே இருக்கிறது.

இதன் 8ஜிபி+256ஜி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 12ஜிபி+256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும், 12ஜிபி+512ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் 2 போன்களுக்கும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆகவே, ரெட்மி நோட் 13 ப்ரோ போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.23,999 விலைக்கும், ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.29,999 விலைக்கும் வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டில் பிரீமியம் போன் வேண்டுமானால், இந்த சீரிஸ் நல்ல தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Percent Discount on Redmi Note 13 Pro 5G With 200MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X