Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W டர்போசார்ஜ்.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் சென்சார் கொண்ட 200எம்பி கேமரா மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 67W டர்போசார்ஜ் கொண்ட 5100mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போன் விற்பனைக்கு கிடைக்கிறது

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro 5G Specifications): இந்த ரெட்மியில் சாம்சங் ஐசோசெல் எச்பி3 சென்சார் (Samsung ISOCELL HP3 Sensor) கொண்ட 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு அல்ட்ரா-ஹை ரெஸ் கேமரா (Ultra-High Res Camera) மாடலாகும். ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே மாடல்!

ஏஎல்டி ஆன்டி-கிளார் ப்ரொபஷனல் கோட்டிங் (ALD Aanti-glare Professional Coating) சப்போர்ட் வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மற்றும் 2 எம்பி மேக்ரோ கொண்டிருக்கிறது. இந்த டிரிபிள் ரியர் கேமராவில் 200 எம்பி மோட் (200MP Mode), 4எக்ஸ் இன்-சென்சார் லாஸ்லெஸ் ஜூம் (4X In-Sensor Lossless Zoom) வருகிறது.

நைட் மோட் (Night Mode), பியூட்டி மற்றும் டெப்த் கன்ட்ரோல் கொண்ட போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), டில்ட்-ஷிப்ட் (Tilt-shift), ப்ரோ மோட் (Pro Mode) போன்ற போட்டோகிராபி பீச்சர்கள் வருகின்றன. அதேபோல வீடியோ மேக்ரோ மோட் (Video Macro Mode), 4K ரெக்கார்டிங், ஷார்ட் ஃபிலிம்ஸ் டெம்லேட் போன்ற வீடியோகிராபி பீச்சர்களும் இருக்கின்றன.

ஏஐ பியூட்டி மோட் (AI Beautify Mode), செல்பீ டைமர் (Selfie Timer), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) போன்ற பீச்சர்கள் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, கேமரா பிரியர்களை தட்டித் தூக்கும்படியான அவுட்புட் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனில் எதிர்பார்க்கலாம்.

இந்த கேமராவை போலவே டிஸ்பிளே பீச்சர்களும் பின்னிப்பெடல் எடுக்கின்றன. 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

மேலும், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது. போதாதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus Protection) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியும் மிரளவிடும்படி கிடைக்கும்.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடையாது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஹைபர் ஓஎஸ் வருகிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.

5100mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார், ஐஆர் பிளாஸ்டர், டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் உடன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். அதேபோல எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கும் ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை ரூ.23,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Percent Discount on Redmi Note 13 Pro 5G 200MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X