ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.17,443 பட்ஜெட்ல OnePlus.. 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் (OnePlus Nord CE 3 Lite) போனுக்கு கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நோர்ட் சீரிஸ் போன்களில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் மாடல் மட்டுமே ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைத்து வந்தது. இதனால், அந்த போனின் விற்பனையானது, படுஜோராக இருந்தது. இந்த விற்பனையை மேலும் மிரளவிடும் விதமாக அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் தளங்களில், இதுவரையில் கிடைக்காத விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அசூர விற்பனையாகிறது. இந்த போனின் கேமரா, பேட்டரி, டிசைன் போன்ற அனைத்தும் மிட்-ப்ரீமியம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. அந்த அம்சங்களுடன் விலை விவரங்களையும் இப்போது பார்ப்போம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE3 Lite Specifications): ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) வருகிறது. 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும். அதோடு 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

அசாஹி டிராகன்டெய்ல் ஸ்டார் கிளாஸ் (Asahi Dragontail Star Glass) பாதுகாப்பு கொண்டுள்ளது. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் போனில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவானது, ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி சப்போர்ட் கொண்டுள்ளது.
16 எம்பி செல்பீ கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கேமரா மிரளவிடும் அவுட்புட் கொடுக்கும் விதமாக இருக்கிறது. அதேபோல 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. இதுவொரு 5ஜி மாடலாகும். பாஸ்டல் லைம் (Pastel Lime) மற்றும் குரோமாடிக் கிரே (Chromatic Gray) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
இந்த போனின் அறிமுக விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசானில் ரூ.17,999 விலைக்கும், பிளிப்கார்ட்டில் ரூ.18,335 விலைக்கும் கிடைக்கிறது. அதிலும், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.892 உடனடி தள்ளுபடியில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த தள்ளுபடியை பெறலாம். ஆகவே, இந்த போனை ரூ.17,443க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications