சூறாவளி ஆஃபர்.. வெறும் ரூ.17,999 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் பிரியர்களும் அமேசான் (Amazon) தளத்தில் குவியும்படியான டிஸ்கவுண்ட் 108 எம்பி கேமரா, 67W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) 5ஜி போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specification): இந்த ஒன்பிளஸ் நோர்ட் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) கொண்டிருக்கிறது.

அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் அசாகி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் டிஸ்பிளே பாதுகாப்பு கொண்டுள்ளது.
இந்த மாடலில் 108 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சாருடன் வருகிறது.
இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 195 கிராம் எடை கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜிங் வருகிறது. இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6, ப்ளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்டவை வருகின்றன.
இந்த நோர்ட் லைட் போனானது, பாஸ்டல் லைம் (Pastel Lime) மற்றும் குரோமேடிக் கிரே (Chromatic Gray) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த விலையில் அமேசான் தளத்தில் தட்டித்தூக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால், ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதோடு ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.
இதுபோக ரூ.18,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.17,999க்கு வாங்கி கொள்ளலாம். 108 எம்பி சாம்சங் சென்சார் கேமரா, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட போன் பட்ஜெட் விலையில் வேண்டுமானால், இந்த மாடலை வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications








