Home
Mobile

அடிச்சு தூக்குது சேல்.. பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்கள் அமேசான் தளத்தில் குவியும்படியான தள்ளுபடி 100W சூப்பர்வூக் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) 5ஜி போனுக்கு கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஒன்பிளஸ் 11ஆர் அம்சங்கள் (OnePlus 11R Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட் வருகிறது.

அடிச்சு தூக்குது சேல்.. பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. SONY கேமரா மாடல்!

1440Hz PWM டிம்மிங் பிரிகொன்சி வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) கொண்டிருக்கிறது, இந்த ஒன்பிளஸ் மாடல். ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் வருகிறது.

இந்த சிப்செட் பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் வருவதால், லாக்-ப்ரீ அனுபவம் எதிர்பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. எஸ்டி கார்டு சப்போர்ட் கிடையாது, ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டும் வருகிறது. ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

பிரீமியம் சென்சார்களுடன் பக்கா கேமரா வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் (Triple Rear System) உள்ளது. இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் உள்ளது.

அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (Omnivision OV08D10) சென்சார் மற்றும் மேக்ரோவில் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சார் வருகிறது. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி கேமரா அவுட் எதிர்பார்க்க முடியும். 16 எம்பி செல்பீ ஷூட்டர் இந்த ஒன்பிளஸ் போனில் வருகிறது.

கேமராவை போலவே 100W சூப்பவூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது. அதோடு டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதேபோல யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த போனில் சோனிக் பிளாக் (Sonic Black) மற்றும் கேலடிக் சில்வர் (Galactic Silver) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆக இருந்தது. அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.44,999ஆக இருந்தது.

இப்போது, 8 ஜிபி ரேம் மாடலானது, அமேசான் (Amazon) தளத்தில் வெறும் ரூ.35,999 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.1000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த போனை ரூ.34,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Percent Discount on OnePlus 11R 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X