அசூர விற்பனை.. வெறும் ரூ.10,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் போட்டி கொடுத்துவரும் சீன நிறுவனங்களை மிரளவிடும்படி ரூ.10,999 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களுடன் ப்ரீமியம் டிசைனில் லாவா ஸ்டோர்ம் (Lava Storm) 5ஜி போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ரியல்மி, ரெட்மி, ஐடெல், போகோ, இன்பினிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பட்ஜெட் விலை போன்களை போட்டிப்போட்டு கொண்டு களமிறக்கி வருகின்றன. இந்த போட்டியின் காரணமாக மலிவு விலையிலும் அவ்வப்போது நல்ல நல்ல அம்சங்கள் கிடைக்கிறது. ஆனால், இந்த முறை இந்தியாவின் லாவா நிறுவனம் அதை செய்துள்ளது.

லாவா ஸ்டோர்ம் அம்சங்கள் (Lava Storm Specification): இந்த லாவா போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (Octa-core MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.
16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லாவா போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த போனில் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பன்ஞ் ஹோல் (Punch Hole) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 396 பிபிஐ சப்போர்ட் வருகிறது.

இந்த லாவா போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து 214 கிராம் எடை மற்றும் 8.96 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன.
இந்த லாவா ஸ்டோர்ம் போனில் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது. இந்த லாவா போனில் 5ஜி எஸ்ஏ (5G SA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது.
அதேபோல ப்ளூடூத் வி5.0 (Bluetooth V5.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஓடிஜி (OTG) ஆகியவை வருகின்றன. இந்த லாவா 5ஜி போன் பக்கா ப்ரீமியம் டிசைனில் கேல் கிரீன் (Gale Green) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த லாவா ஸ்டோர்ம் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அமேசான் (Amazon) தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழுதாக ரூ.2,500 தள்ளுபடி மற்றும் 12,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
இந்த தள்ளுபடியை பெற சிட்டிபேங்க் கிரெடிட் கார்டை (Citibank Credit Card) பயன்படுத்த வேண்டும். ரூ.10,000 பட்ஜெட்டில் பக்கா ப்ரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், நல்ல ரேம், மெமரி மற்றும் பேட்டரி சப்போர்ட் வேண்டும் என்றால், இந்த லாவா ஸ்டோர்ம் 5ஜி போனை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








