இந்தியா: நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய 10.ஆர்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
10.or, tech news, smartphone ,Technology, News, India, 10.ஆர்ஜி , வாட்ஸ்ஆப், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா
இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு 10.ஆர்ஜி (டெனார்) பிராண்டின் புதிய 10.ஆர் ஜி2 என்ற ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.

மேலும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் ஜூலை 15 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:
10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2246×1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சம் இவற்றுள் அடக்கம்.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் உடன் அட்ரினோ509ஜிபியு வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு:
10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான கேமரா:
10.ஆர் ஜி2 சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா என இரண்டு கேமராக்க பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோல் 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இதனுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம், மேலும் 3.5எம்எம், ஆடியோ ஜாக்,4ஜி வோல்ட்இ, வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை மற்றும் சிறப்பம்சம்
இந்த ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ள செல்பீ கேமரா குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் சீராக இயங்கும், தரமான புகைப்படங்களை வழங்கும். பின்பு ரூ.15,000-விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications