ஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.!

|

சில நாட்களுக்கு முன்பு 10.ஆர்ஜி (டெனார்) பிராண்டின் புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் ஜீலை 15-ம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை வெளியாகியுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது, அதபோல் 6ஜிபி ரேம் கொண்ட 10.ஆர் ஜி2 14,599-விலையில் விற்பனைக்கு வெளிவரும்.

அசத்தலான டிஸ்பிளே:

10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2246×1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சம் இவற்றுள் அடக்கம்.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் உடன் அட்ரினோ509ஜிபியு வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.!

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு:

10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான கேமரா:

10.ஆர் ஜி2 சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா என இரண்டு கேமராக்க பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோல் 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இதனுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி!

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம், மேலும் 3.5எம்எம், ஆடியோ ஜாக்,4ஜி வோல்ட்இ, வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
10.or G2 Limited Edition smartphone price revealed: Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more