Home
Mobile

வரிசை கட்டும் பிரபல பிராண்டுகள்.. செப்.11 - 15 க்குள் அறிமுகமாகும் 10 புதிய போன்கள்.. இதோ லிஸ்ட்!

செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்.. அதாவது வெறும் 5 நாட்களில் மொத்தம் 10 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.. அவைகளில் ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் சில மாடல்களும் அடக்கம் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்!

ஏனென்றால் குறிப்பிட்ட 5 நாட்களில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள், எந்த தேதியில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு விட்டன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எதெல்லாம் இந்தியாவில் அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

செப்.11 - 15 க்குள் அறிமுகமாகும் 10 புதிய போன்கள்.. இதோ லிஸ்ட்!

01. நோக்கியா ஜி42 5ஜி (NOKIA G42 5G): நோக்கியாவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். நோக்கியா எக்ஸ்30 5ஜி-க்கு பிறகு நாட்டில் அறிமுகமாகும் 2வது 5ஜி-எனேபிள்டு நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

இந்தியாவில் இதன் விலை ரூ.18,000 க்குள் இருக்கும் என்றும் நோக்கியா நிறுவனமே சூசகமாக கூறியுள்ளது. மேலும் இது 6.56-இன்ச் HD+ 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப், 50எம்பி ரியர் மெயின் கேமரா, 8எம்பி செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 20W சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களுடன் வரும்/

02. ஐபோன் 15 தொடர் (iPhone 15 Series): ஒட்டுமொத்த டெக் உலகமும் எதிர்பார்க்கும் புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடக்கும் ஆப்பிள் நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படவுளான. குறிப்பிட்ட நாளில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என்கிற 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் அறிமுகமாகும் இந்த 4 ஐபோன்களிலுமே யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் டைனமிக் ஐலேண்ட் இடம்பெறும். குறிப்பாக ப்ரோ மாடல்கள் ஆக்ஷன் பட்டனுடன் வரும். கூடுதலாக, அல்ட்ரா என்று அழைக்கப்படும் ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிஸ்கோப் ஜூம் கேமரா இடம்பெறவும் வாய்ப்புள்ளது.

03. ஹானர் 90 (Honor 90): இது செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது ஹானர் பிராண்ட் ஆனது மீண்டும் இந்திய சந்தைக்குள் நுழைகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே பல நாடுகளில் விற்பனையில் உள்ளது. எனவே இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த குழப்பமும் இல்லை.

இது ரூ.39,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் சிப்செட், 6.7 இன்ச் 1.5கே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு டிஸ்பிளே, 200எம்பி ரியர் கேமரா, 50எம்பி செல்பீயி கேமரா, இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 5000mAh பேட்டரி மற்றும் 66W சார்ஜிங் போன்றவைகளை பேக் செய்கிறது.

நாம் இங்கே பேசும் 10 மாடல்களில் மேற்கண்ட 6 மாடல்கள் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மீதமுள்ள 4 மாடல்கள் (இப்போதைக்கு) சீனாவில் மட்டுமே வெளியாகவுள்ளன. இந்த பட்டியலில் ஹானர், சாம்சங் மற்றும் ஒப்போ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன, அதென்ன மாடல்கள்? இதோ விவரங்கள்:

04. ஹானரின் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்: ஹானர் நிறுவனம் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதியன்று சீனாவில் ஒரு நிகழ்வை நடத்துகிறது. அந்நிகழ்வில் ஒரு புதிய ஹானர் போல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வதந்திகளின்படி, அது மேஜிக் விஎஸ் 2 அல்லது மேஜிக் வி2 லைட் (Honor Magic Vs 2 or Magic V2 Lite) ஆக இருக்கலாம்.

05. சாம்சங்கின் புதிய டபுள்யூ சீரீஸ்: செப்டம்பர் 15 ஆம் தேதியன்று சாம்சங் நிறுவனம் தனது புதிய டபுள்யூ சீரிஸ் போன்களை சீனாவில் அறிவிப்பதாக உறுதி செய்துள்ளது. இந்த சீரீஸின் கீழ் சாம்சங் டபுள்யூ24 (Samsung W24) மற்றும் சாம்சங் டபுள்யூ24 பிளிப் (Samsung W24 Flip) என்கிற 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

06. ஒப்போ ஏ2 ப்ரோ (Oppo A2 Pro): இது செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. லீக்ஸ் தகவலின்படி, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ கர்வ்டு ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும், இது 5000mAh பேட்டரியை பேக் செய்யும். ஆனால் சிப்செட் பற்றிய எந்த தகவலும் இல்லை. இறுதியாக, இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும்.

Best Mobiles in India

English summary
10 New Smartphones Including iPhone 15 Nokia G42 Honor 90 Launching Next Week in India and Globally
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X