Home
Mobile

முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள ஐபோன் அம்சங்கள்.!

இத்தகைய சிறப்புமிக்க ஐபோன்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அனைவருக்கும் ஏதேனும் சமயத்தில் பயன்தரக்கூடிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

By Meganathan S

ஸ்மார்ட்போன் சந்தையில் விலை உயர்ந்த மாடல்களாக ஆப்பிள் ஐபோன்கள் இருக்கின்றன. ஐபோன்களின் விலை எவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டாலும், இதனை வாங்க பெரும்பாலான ரசிகர் கூட்டம் உலகெங்கிலும் இருக்கத் தான் செய்கிறது.

பயன்தரும் பத்து ஐபோன் அம்சங்கள்:ஏர்டிராப்,  பேக் டூ டாப் மற்றும் பல.!

ஆப்பிள் கடந்த ஆண்டு ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஐபோன் எக்ஸ் எனும் மாடலை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் என்பதோடு பல்வேறு விசேஷ அம்சங்களையும் கொண்டிருக்கிறது. ஐபோன் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தை அதன் வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி அதனை இத்தனை ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் வெற்றிகரமாக தக்கவைத்தும் வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஐபோன்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அனைவருக்கும் ஏதேனும் சமயத்தில் பயன்தரக்கூடிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மியூட் ஸ்விட்ச்

மியூட் ஸ்விட்ச்

ஆப்பிள் நிறுவனம் இதனை ரிங்/சைலன்ட் ஸ்விட்ச் என அழைக்கிறது. மொபைல் போன்களை அழைப்புகளுக்காக மட்டும் பயன்படுத்திய காலத்தில் இது ஹார்டுவேர் ரிமைன்டராக இருந்தது. ஐபோன் பயன்பாடு அதிகரிக்க இது இன்றும் பயன்தரும் அம்சமாகவே இருக்கிறது.

 பேக் டூ டாப்

பேக் டூ டாப்

சஃபாரி மூலம் இணையத்தில் மூழ்கி கிடக்கும் சமயத்தில் திடீரென குறிப்பிட்ட வலைப்பக்கத்தின் மேல் செல்ல வேண்டுமெனில் ரிட்டன் டூ தி டாப் எனும் ஷார்ட்கட் நம் அனைவருக்கும் பெரும்பாலான சமயங்களில் பயன்பட்டிருக்கும்.

ஃபிளாஷ்

ஃபிளாஷ்

ஐபோன் 8, 8 பிளஸ் அல்லது ஐபோன் எகஸ் மாடல்களில் பெரும்பாலானோர் விரும்பும் வகையில் அதன் கேமரா அம்சங்கள் இருக்கின்றன. ஸ்லோ சின்க் ஃபிஷாஷ் இந்த பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும். இந்த அம்சம் மூலம் கேமரா ஃபிளாஷ் சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஃபிளாஷ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சிறப்பாக காட்சியளிக்கின்றன.

ஏர்டிராப்

ஏர்டிராப்

ஆப்பிள் சாதனங்களிடையே ஃபைல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்ந்து கொள்ள ஏர்டிராப் தலைசிறந்த சேவையாக இருக்கிறது. ஷேர் பட்டனை க்ளிக் செய்து தரவுகளை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.

ஏர்டிராப் அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் இருந்ததை விட தற்சமயம் இது அதிக பிரபலமாமகவும், பலராலும் பயன்படுத்தக்கூடிய அம்சமாகவும் மாறி இருக்கிறது.

ஐபோன் எஸ்இ

ஐபோன் எஸ்இ

ஆப்பிள் நிறுவனத்தின் விலை குறைந்த மற்றும் சிறிய ஐபோன் மாடலாக ஐபோன் எஸ்இ இருக்கிறது. ஐபோன் 5/5எஸ் தோற்றம் கொண்ட ஐபோன் எஸ்இ கேமரா மற்றும் இதர அம்சங்கள் ஐபோன் 6எஸ் மாடலை போன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அளவில் இதை விட சிறப்பான ஸ்மாக்ட்போனினை பெறுவது மிகவும் கடினம்.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைபை பாஸ்வேர்டு

வைபை பாஸ்வேர்டு

ஐஓஎஸ் 11 இயங்குதளத்தின் பயனுள்ள அம்சங்களில் வைபை நெட்வொர்க்கில் இணையும் போதும் உங்களது நண்பர்களின் ஐஓஎஸ் அல்லது மேக் சாதனத்தில் ஷேர் யுவர் வைபை அம்சம் தெரியும், அவர்கள் அனுமதி அளித்ததும் சாதனம் தானாக இணைந்து கொள்ளும். இதற்கு குறிப்பிட்ட நபர் உங்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

 ரீச்சபிலிட்டி

ரீச்சபிலிட்டி

ஐபோன் 6 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும் போது ரீச்சபிலிட்டி எனும் அம்சம் சேர்க்கப்பட்டது. இந்த மென்பொருள் அம்சம் ஐபோன் எஸ்இ தவிர மற்ற மாடல்களில் மிகவும் சீராக வேலை செய்யும். ஹோம் பட்டனில் இருமுறை டேப் செய்தால், ஸ்கிரீன் சிறியதாகி கட்டை விரல் மூலம் இயக்க வழி செய்திறது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ஐஓஎஸ் 11 வெளியீட்டில் புகைப்படங்களை எடுப்பதற்கான வசதிகள் சுலபமாக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அம்சங்கள் புகைப்படங்களை மிக நேர்த்தியாக படமாக்க வழி செய்கின்றன. இதை பயன்படுத்தி இயற்கை, சுற்றுச்சூழல், உணவு வகைகள் என எல்லாவற்றையும் மிக நேர்த்தியாத படமாக்க முடிகிறது.

 லைவ் போட்டோஸ்

லைவ் போட்டோஸ்

ஐபோன்களில் லைவ் போட்டோஸ் அம்சம் ஒரு புகைப்படம் மற்றும் 3 நொடி வீடியோவை கொண்டிருக்கும். இதில் புகைப்படம் எடுக்கப்பட்ட 1.5 நொடிகளுக்கு முன்பும் பின்பும் என வீடியோ படமாக்கப்படும். இந்த அம்சம் புகைப்படங்கள் எடுக்கப்படும் போது இருக்கும் சூழலை மீண்டும் கண் முன் கொண்டு வருகிறது.

ஐபோன் டிராக்பேட்

ஐபோன் டிராக்பேட்

அனைத்து 3டி டச் ஐபோன் மாடலிலும் மறைக்கப்பட்ட டிராக்பேட் இருக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தி பிடிக்க வேண்டும், இதனை குறிப்பிட்ட பட்டன் காலியாகும் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இனி கீபோர்டு தானாக டிராக்பேட் ஆக மாறிவிடும்.

Best Mobiles in India

English summary
10 iPhone features I can't live without; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X