ஆண்ட்ராய்டு இங்குதளத்தை பயன்படுத்துவோருக்கு கிடைக்காத பத்து ஐபோன் அம்சங்கள்

|

உலகின் பிரபல ஸ்மார்ட்போன் இயங்குதளமான ஆண்ட்ராய்டு பதிப்புகளை பயன்படுத்துவோருக்கு கிடைத்திராத பத்து ஐபோன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு இங்குதளத்தை பயன்படுத்துவோருக்கு கிடைக்காத பத்து ஐபோன் அம்ச

ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்? தல - தளபதி போல எப்போதும் தனக்கு பிரியமான கூட்டத்தை வைத்திருக்கும் இயங்குதளங்களாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை இரண்டு இயங்குதளங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன. எனினும் சில அம்சங்கள் ஐபோனிற்கும், சில அம்சங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாய் இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் இயங்குதளத்தில் மட்டும் செய்யக் கூடிய பத்து அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஏர்டிராப்

ஏர்டிராப்

ஐஓஎஸ் இயங்குதளத்தில் இருக்கும் தலைசிறந்த அம்சங்களில் இதுவும் ஒன்று. ஏர்டிராப் கொண்டு தகவல்களை மற்ற ஐபோன் வாடிக்கையாளர்களுடன் மிகவும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். பில்ட்-இன் சேவையாக கிடைக்கும் ஏர்டிராப் கொண்டு ஃபைல்கள், புகைப்படம் மற்றும் லின்க்களை மிகவும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். இத்துடன் ஐபோன்களில் இருந்து மேக் கணினிகளுக்கும் பகிர்ந்து கொள்ள முடியும்.

புளோட்வேர்

புளோட்வேர்

ஆண்ட்ராய்டு போன்களை போல் இல்லாமல், ஆப்பிள் தனது சாதனங்களில் புளோட்வேர்களை குறைக்க முயற்சித்து வருகிறது. ஐஓஎஸ் 10 இயங்குதளத்தில் இதனை டிசேபிள் செய்யவோ அல்லது செயலிகளை மறைத்து வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

ரெட்டினா டிஸ்ப்ளே

ரெட்டினா டிஸ்ப்ளே

ஆப்பிள் சாதனங்களில் இவ்வகையான டிஸ்ப்ளேக்களை 2011-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஐபோன்கள் அதிகம் விற்பனையாக இதுவும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

லைவ் போட்டோஸ்

லைவ் போட்டோஸ்

லைவ் போட்டோஸ் அம்சம் புகைப்படத்தை நகரச் செய்து மேலும் அதற்கு உயிரூட்டுகிறது. இந்த அம்சத்தில் புகைப்படம் கிளிக் செய்யப்படும் முன்பும், பின்பும் படமாக்கப்படுகிறது. இந்த ஆப்ஷனை ஸ்கிரீனினை அழுத்திப் பிடித்து இயக்க முடியும்.

சீன தயாரிப்புகளுக்கு ஆப்பு : இப்போது தான் நாம் இந்தியர்களாக நடந்து கொண்டுள்ளோம்.!சீன தயாரிப்புகளுக்கு ஆப்பு : இப்போது தான் நாம் இந்தியர்களாக நடந்து கொண்டுள்ளோம்.!

அதிவேக அப்டேட்கள்

அதிவேக அப்டேட்கள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்கள் வேகமாக வழங்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டில் புதிய அப்டேட் பெற ஸ்மார்ட்போனினை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் நிலையில், ஐஓஎஸ் இயங்குதளத்தில் அப்டேட்கள் சீராக வழங்கப்படுகிறது.

3டி டச்

3டி டச்

செயலிகளை திறந்து அதன் பின் அதனை மூடும் நேரத்தை குறைத்து பணிகளை நேரடியாக முடிக்க இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. இதனை செய்ய செயலி ஐகானை அழுத்தி பிடித்து, பின் திரையில் தோன்றும் ஆப்ஷனை தேர்வு செய்து பணி நிறைவேறும் வரை காத்திருக்க வேண்டும்.

சஃபாரி

சஃபாரி

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை விட சஃபாரியை பயன்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் ஆகும். இந்த பிரவுசர் ஐபோனிற்கு 2007-ம் ஆண்டில் வழங்கப்பட்டது. பல்வேறு இண்டர்நெட் பிரவுசர்களை போன்று சீராக இயங்கும் சஃபாரி பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு வேகமான அப்டேட்களையும் பெறுகிறது.

 சிறந்த செயலி

சிறந்த செயலி

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை விட பயனாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதன் டெவலப்பர்கள் சிறந்த செயலிகளை ஐஓஎஸ் பதிப்புகளில் முதலில் வழங்குகின்றனர். இதேபோன்ற செயலிகள் ஆண்ட்ராய்டில் கிடைத்தாலும் ஐஓஎஸ் பதிப்பில் கிடைக்கும் செயலிகளின் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் வடிவமைப்புகள் செயலியை சீராக இயக்குகிறது.

 ஃபேஸ்டைம்

ஃபேஸ்டைம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீடியோ சாட் செய்ய சிறப்பான செயலியாக ஃபேஸ்டைம் இருக்கிறது. பில்ட்-இன் அம்சமாக வழங்கப்படும் ஃபேஸ்டைம் சாதாரண அழைப்புகளை எளிமையாக வீடியோ கால்களாக மாற்ற வழி செய்கிறது. வைபை மற்றும் மொபைல் இண்டர்நெட் மூலம் வேலை செய்யும் ஃபேஸ்டைம் இணைப்பு வேகம் குறைந்தால் வீடியோ கால்களை தானாக ஆடியோ அழைப்புகளாக மாற்றி விடும்.

ஆப்பிள் பே

ஆப்பிள் பே

இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் ஆப்பிள் பே தலைசிறந்த மொபைல் பேமெண்ட் சேவையாக இருக்கிறது. பயணங்களின் போது ஐபோன் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Android or iPhone? This is the never ending debate that's going on for years.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X