இந்தியாவில் வெளியான சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்

By Meganathan

இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமாக கால்பதிக்க நிதானமாகவும் ஆழமாகவும் கால் பதித்து வருவம் சோநி நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் சோனி எக்ஸ்பீரியா இசட் 3. இது சிறப்பான அம்சங்களோடு அந்நிறுவனத்தின் பெயரில் வெளியான புதிய ஸ்மார்ட்போன்.

 

புதிய எக்ஸ்பீரியா இசட் 3 அதன் முந்தைய மடலை விட கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிகுப்பதற்கு உதாரணமாக இதன் கேமரா மற்றும் பேட்டரியை குறிப்பிடலாம். இந்த புதிய மாடல் மெலிதாக இருப்பதோடு வேகமாகவும் இயங்குவது மற்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக அமைகிறது.

இதில் டூயல் லென்ஸ் கேமரா பொருத்தப்பட்டிருப்பதோடு சிறப்பான அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 ஐபோன் 6 மாடலை விட விலை குறைவு என்பதோடு ஐபோன் 6 ப்ளஸை விட ரூ.11,900 குறைவாகவே கிடைக்கிறது. ஆன்டிராய்டு கருவி இந்திய சந்தையில் ரூ.50,000 க்கு கிடைக்கின்றது.

சோனி எகஸ்பீரியா இசட் 3 முக்கிய சிறப்பம்சங்கள்

எக்ஸ்பீரியா இசட் 3 5.2 இன்ச் மற்றும் 1920*1080 ரெசல்யூஷனில் முழு எஹ்டி டிஸ்ப்ளே இருப்பதோடு ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே எக்ஸ் - ரியால்டி மொபைல் பிக்சர் இன்ஜீன் வசதியை மேம்படுத்தும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 எஸ்ஓசி மற்றும் 5.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு மற்றும் 4ஜி எல்டிஈ மோடெம் மற்றும் ஆட்ரீனோ 330ஜிபியு கொண்டுள்ளது. ஸ்விஃப்ட் மல்டி டாஸ்க்கிங் வசதிக்காக சோனி இதில் 3 ஜிபி ராம் கொடுத்துள்ளது.

இது கூகுளின் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதி கொண்ட 20.7 எம்பி ப்ரைமரி கேமராவும் 2.2 எம்பி முன் பக்க கேமராவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியோடு கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

4ஜி, எல்டிஈ, ஏஜிபிஎஸ்/குலோனஸ், ப்ளூடூத் 4.0, டிஎல்என்ஏ, என்எப்சி, நேட்டிவ் யுஎஸ்பி டெத்தெரிங் சின்க்ரோனைசேஷன், யுஎஸ்பி ஹை ஸ்பீடு 2.0, மைக்ரோ யுஎஸ்பி சப்போர்ட், வைபை மற்றும் ஹாட்ஸ்பாட் இதன் அம்சங்களை அலங்கரித்துள்ளதோடு சோனி எக்ஸ்பீரியா இசட் 3 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்ட்ரி 19 மணி நேர, மற்றும் 740 மணி நேர ஸ்டான்ட்பை கொடுக்கும்.

பெரிய ஸ்கிரீன் மற்றும் சிறப்பான மல்டிமீடியா ஆப்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன்களை எகிர்ப்பார்த்தவர்களுக்கு சோனி எக்ஸ்பீரியா இசட்3 சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் சிறப்பான வடிவமைப்பு மற்றும் பல புதிய அம்சங்கள் இதில் இருக்கின்றது.

இங்கு சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் 10 சிறந்த சிறப்பம்சங்களை பாருங்கள்

கிளாசிக் ஃபார்ம் பேக்டர்

கிளாசிக் ஃபார்ம் பேக்டர்

எக்ஸ்பீரியா இசட் 2 அனைவருக்கும் பிடித்திருந்தாலும் இதன் அடுத்த வரவு அனைவரையும் கவர்ந்துவிட்டதென்று தான் கூற வேண்டும். அலுமினியம் மற்றும் கண்னாடி கொண்டு வடிவமைக்கப்பட்டதோடு முன் பக்க ஸ்பீக்கர் இதன் வடிவமைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

7.3 தட்டையாக இருப்பதால் இசட் 3 அதன் முந்தைய மடலை விட மெலிதாக அமைந்துள்ளதோடு சாம்சங் கேலக்ஸி ஆல்பாவை விட எடை குறைவாகவே இருக்கிறது. அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த போன் பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. பின் புறம் கண்னாடி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போனுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மொத்தத்தில் இசட் 3 உபயோகிக்க சிறந்த ஸ்மார்ட்போன்.

 

திகைப்பூட்டும் டிஸ்ப்ளே

திகைப்பூட்டும் டிஸ்ப்ளே

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 கடந்த ஆண்டை விட வித்தியாசமான மாடலாக காட்சியளிக்கிறது. இம்முறை இந்நிறுவனம் திடமான ஸ்கிரீன், அட்டகாசமான கேமரா மற்றும் மற்ற அம்சங்களிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளது. எக்ஸ்பீரியா இசட் 3 5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன், 1920*1080 ரெசல்யூஷன் கொண்டுள்ளது. ஸ்கிரீன் பார்க்க அழகாகவும் அதே சமயம் கேலக்ஸி எஸ்5 மற்றும் ஐபோன் 6 மாடல்களை விட பெரிதாகவும் உள்ளது. இதோடு இதன் டிஸ்ப்ளே இயற்கை வண்னங்களை பிரதபளிப்பதோடு, சூழலுக்கு ஏற்ப தானாக ப்ரைட்னெஸை மாற்றியமைக்கும் திறன் உண்மையில் சிறந்த பயன் தரும்.

மென்பொருள்
 

மென்பொருள்

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 கூகுளின் ஆன்டிராய்டு ஓஎஸ் 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு ஆன்டிராய்டு எல் அபடேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியின் யுஐ ஆன்டிராய்டில் கச்சிதமாக வேலை செய்கிறது.

கேமரா

கேமரா

20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 1/2.3 இன்ச் சென்சார் மற்றும் சிங்கிள் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 25 எம்எம் லென்ஸ் மற்றும் 20.7 மெகாபிக்சல் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் இருக்கிறது. ஐஎஸ்ஓவை பொருத்தவரை ஐஎஸ்ஓ12800 கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெளிச்சத்திலும் கச்சிதமான படங்களை பிரதிபலிப்பதோடு டெடிக்கேடேடெட் கேமரா ஷட்டர் கீ தண்னீரிலும் படங்களை எடுக்க உதவும். வீடியோ கால்களை மேற்கொள்ள 2.2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் எஹ்டிஆர் மோடும் உள்ளது. இரு கேமராக்களிலும் 1080பி வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்பதோடு இதன் ப்ரைமரி கேமரா மூலம் 4கே வீடியோக்களை எடுக்க முடியும்.

இதில் இருக்கும் கேமரா ஆப் மூலம் நீங்கள் சுப்பீரியர் மற்றும் ஆட்டோமேட்க் மோட்களை பயன்படுத்தலாம், மேலும் எக்ஸ்பீரியா இசட் 3 உங்களை பொக்கே ஸ்டைல் மற்றும் பேக்கிரவுன்டு டீபோகஸ் படங்களையும் எடுக்க உதவும்.

 

செயல்திறன்

செயல்திறன்

சோனி எக்ஸ்பீரியா இசட் 3, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் கொண்டு இயங்குவதோடு 3 ஜிபி ராம் வசதியும் கொண்டுள்ளது. பயன்படுத்தும் போது தடையின்றி வீடியோ மற்றும் கேம்களை அனுபவிக்க முடியும்.

பேட்டரி

பேட்டரி

சோனி 3100 எம்ஏஎஹ் பேட்டரியை பொருத்தியுள்ளது. இது கேலக்ஸி எஸ் 5 மற்றும் எஹ்டிசி ஒன் எம்8 மாடல்களை விட பெரிதாகும். சீரான பயன்பாட்டில் 13 மணி நேரம் நீடிக்கும் இது கேலக்ஸி எஸ்5 மாடலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முரட்டுத்தன இயல்பு

முரட்டுத்தன இயல்பு

எஹ்டிசி ஒன் எம்8 மற்றும் ஐபோன் 6 மாடல்களை விட சோனி எகஸ்பீரியா இசட் 3 தூசு மற்றும் தண்னீர் ரெசிஸ்டன்ட் என்தோடு எக்ஸ்பீரியா இசட் 3 ஐபி68 சான்றிதழ் பெற்றிருப்பதால் நீரிலும் உபயோகப்படுத்தலாம்

இணைப்பு

இணைப்பு

எக்ஸ்பீரியா இசட் 3 வைபை 802.11 ஏ/பி/ஜி/என்/ஏசி, 3ஜி/2ஜி, ஜிபிஎஸ் குலோனஸ் என்எப்சி மற்றும் ப்ளூடூத் 4.0 இருப்பதோடு 4ஜி எல்டிஈ வசதியும் உள்ளது

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

சிறப்பான ஸ்டீரியோ ஸ்பீக்கர்ளுக்கு பெயர்போன சோனி இந்த மாடலில் டூயல் ப்ரான்டல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. மற்ற மாடல்களோடு ஓப்பிடும் போது சிறப்பான சத்தத்தை கொடுக்கும் இது வீடியோ மற்றும் படங்களை பார்க்க சிறந்தது.

ரிமோட் ப்ளே அம்சம்

ரிமோட் ப்ளே அம்சம்

எக்ஸ்பீரியா இசட் 3 மாடலை நீங்கள் பிஎஸ் 4 உடன் இணைத்து கேம்களை அனுபவிக்க முடியும். இதற்கு டிவி ஸ்கிரீன் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் விசேஷமாக எக்ஸ்பீரியா இசட் 3, இசட் 3 காம்பாக்ட் மற்றும் எக்ஸ்பீரியா இசட் 3 டேப்ளெட் காம்பாக்ட்களில்
மட்டும் தான் இருக்கிறது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

சோனி எக்ஸ்பீரியா இசட் 3, 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி மூலம் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது

ஸ்மார்ட்வாட்ச் 3

ஸ்மார்ட்வாட்ச் 3

எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் இன்னும் ஒரு சிறப்பம்சமாக, இதை சோனி ஸ்மார்ட்வாட்ச் 3யுடன் இணைக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதன் விலை பற்றி எந்த தகவல்களும் வெளியி்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X