2018ல் நாம் பார்த்த சிறந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள்.!

புதிய அம்சங்கள் எனும் போது, நோட்ச் டிஸ்ப்ளே, செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ணற்ற சுவாரஸ்யமான அம்சங்களை நாம் பார்த்துள்ளோம்.

|

மிகவும் பரபரப்பாக சென்ற 2018ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது. 2018ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் பிரிவில் நடைபெற்ற என்னென்ன மாற்றங்கள் ஒரு டிரெண்டை உருவாக்கின என திரும்பி பார்க்கவேண்டிய தருணம் இது. புதிய அம்சங்கள் எனும் போது, நோட்ச் டிஸ்ப்ளே, செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ணற்ற சுவாரஸ்யமான அம்சங்களை நாம் பார்த்துள்ளோம்.

2018ல் நாம் பார்த்த சிறந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள்.!

அதன் விளைவாக, ஆல் ஸ்கிரீன் ப்ரெண்ட், இன் டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் கவர்ந்திழுக்கும் கேமரா அம்சங்கள் என அசத்துகின்றன பல ஸ்மார்ட்போன்கள். இந்த ஆண்டில் ஸ்மார்ட்போன்களில் நாம் பார்த்த சில புதிய அம்சங்களை இங்கே காணலாம்.

நாட்ச் டிஸ்ப்ளே

நாட்ச் டிஸ்ப்ளே

2017ன் இறுதியில் ஐபோன் எக்ஸ் வெளியீட்டின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தால் இந்த அம்சம் டிரெண்டானது. விரைவில் ஆண்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் நோட்ச் டிஸ்ப்ளே போன்கள் எனும் களத்தில் இறங்கினர். நோட்ச் திரையை பொருத்தும் வகையில் பேசில் எனும் ஓரப்பகுதிகளை குறைத்து, எட்ஜ் - எட்ஜ் திரைகளை உருவாக்கினர். தற்போது சந்தையில் நாட்ச் திரைகள் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை எனக் கூறும் வகையில், அனைத்து விலைகளும் அவை கிடைக்கின்றன.

 ஸ்லைடிங் கேமரா

ஸ்லைடிங் கேமரா

இந்த ஆண்டில் பல்வேறு புதுமைகளை புகுத்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களில் விவோ முக்கியமானது. ஸ்லைடிங் கேமரா அல்லது பாப்அப் கேமரா எனும் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன்-ஐ இந்த ஆண்டு விவோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. விவோ நெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் பாப்அப் செல்பி கேமரா உடன் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் ஓப்போ பைண்ட் எக்ஸ் மாடல் போனும் ஸ்லைடிங் கேமரா அம்சத்துடன் வெளியாகியுள்ளது.

டிரிபிள்/க்வாட் கேமரா

டிரிபிள்/க்வாட் கேமரா

டூயல் கேமரா என்பது பொதுவான ஒன்றாக மாறி தற்போது வெளியாகும் அனைத்து போன்களும் இரு கேமராக்களுடன் வெளியாகின்றன. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்லும் ஒரு முயற்சியாக சாம்சங், ஹூவாய் மற்றும் ஓப்போ போன்ற பிராண்டுகள் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ள போன்களை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளன. இதை மேலும் மேம்படுத்தி, நான்கு கேமரா உள்ள க்வாட் கேமரா ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது சாம்சங்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

போன் நிறுவனங்களுக்கிடையேயான சிறப்பம்ச போர் அதன் உச்சநிலையை அடைந்த நிலையில், போன் மென்பொருளை தனித்துவமான வழங்க துவங்கியுள்ளன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். அதில் செயற்கை நுண்ணறிவு என்பது ஹாட் செல்லிங் பாய்ண்ட்டாக உள்ளது. இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு உள்ள கேமரா, பேஸ் அன்லாக் போன்ற வசதிகள் அறிமுகமாகியுள்ளன.

ஸ்டாக் ஆண்ராய்டு

ஸ்டாக் ஆண்ராய்டு

நீண்ட நாள்களுக்கு முன்பே ஸ்டாக் ஆண்ராய்டு வெளியாகியிருந்தாலும், இந்த ஆண்டு தான் பிரபலமடைய துவங்கியுள்ளது. அதன் விளைவாக, நோக்கியா, ஆசுஸ் போன்ற பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்களது போன்களை,தூய மற்றும் ஸ்டாக் ஆண்ராய்டு அனுபவத்தை தரும் ஆண்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் வெளியிட துவங்கியுள்ளன.

இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார்

இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார்

முன்னதாக, பிங்கர்பிரிண்ட் சென்சார்கள் போனின் முன்புறம் ஹோம் பட்டனுடன் இணைக்கபட்டிருந்தது. ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பின் காரணமாக, அது பின்பறம் மாற்றப்பட்டது. இந்த ஆண்டு விவோவின் மற்றொரு புதுமையாக, இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார் பிரபலமாகியுள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக உயர்தர பிரிவில் உள்ளவை தற்போது இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சாருடன் வெளியாகியுள்ளன. இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துவரும் நிலையில் இருப்பதால், எதிர்காலத்தில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

யுஎஸ்பி டைப் சி

யுஎஸ்பி டைப் சி

வேகமான தரவு பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்க்கு வழிவகுக்கிறது யுஎஸ்பி டைப் சி போர்ட்கள். உயர்தர போன்களில் பொதுவாக காணப்பட்ட இந்த வசதி, இந்த ஆண்டு அனைத்து குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களிலும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜேக்-க்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிரேடியன்ட் கலர்

கிரேடியன்ட் கலர்

கண்ணாடி பின்புற வடிவமைப்புடன், கிரேடியன்ட் கலர் மற்றும் தனித்துவ டைமண்ட் கட் டிசைன்கள் ஸ்மார்ட்போன் துறையில் பிரபலமாகியுள்ளன. இந்தாண்டின் துவக்கத்தில், பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஒளி படும் போது எதிரொளிக்கும் வகையிலான கவரக்கூடிய க்ரேடியன்ட் கலர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜிங்

ஃபாஸ்ட் சார்ஜிங்

கடந்த சில ஆண்டுகளாகவே பாஸ்ட் சார்ஜிங் வசதி புழக்கத்தில் இருந்தாலும், தற்போது அது பரவலாகியுள்ளது. நடுத்தர ஸ்மார்ட்போன்களில் துவங்கி தற்போது அனைத்து விலை பிரிவிகளிலும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை பொதுவாக காணமுடிகிறது. பொதுவான ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடுதலாக ஒன்ப்ளஸ் மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்கள் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில், புதுமையான தொழில்நுட்பங்களான வார்ப் சார்ஜ் 30 மற்றும் VOOC ப்ளேஸ் சார்ஜ் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளன.

Best Mobiles in India

English summary
10 hottest features we saw on smartphones in 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X