அதிரடியாக வரும் சாம்சங் கேலக்ஸி S5யின் சிறப்பம்சங்கள்...!

By Jagatheesh G
|

இன்று ஆண்ட்ராய்டு போன்கள் நம் மிது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் அடுத்ததாக வரப்போகிற ஆண்ட்ராய்டு போன் மற்றும் புதியதாக வரப்போகிற அதனுடைய பயன்பாடுகள்,வசதிகளை நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான மொபைலான s4 வரிசையில் அடுத்தாகவரவிருப்பது S5. இதனுடைய வசதிகள் மற்றும் பயன்பாடுகளை பார்க்கும் போது மிகவும்பிரம்மிப்பாக இருக்கிறது.

மேலும் ஆப்பிளின் ஐ போன் 5Cமற்றும் 5S தற்போது விற்பனையில் சக்கை போடு போட்டுகொண்டிருக்கிறது இதை மனதில் வைத்தே சாம்சங் இதை வடிவமைத்திருக்கிறது எனலாம்.

இதில் என்னென்ன புது வசதிகள் வர இருக்கின்றன என்பதை பார்ப்போமா இதோ...

#1

#1

சாம்சங் s5 போனானது பிளாஸ்ட்டிக்கால் ஆன OLED டெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டுள்ளது.இதனுடைய வடிவமைப்பு சிறிது வளைந்து காணப்படும். இதற்க்கு முன் வந்த மொபைல் போன்களைப்போலவே காணப்படும். மேலும் இது மெல்லிதானதாக இருக்கும். அதுமட்டும்மல்லது இது எளிமையாக உடையக்கூடியதாக இருக்காது.மேலும், இதனுடைய டிஸ்பிளே அளவானது 5 இன்ச்க்கு அதிகமாக இருக்கும். மேலும் இதன் பிக்சர் ரெசொலிஷனானது மிக அதிகமான 1440x2560 பிக்சல்சை கொண்டுள்ளது.

#2

#2

பிங்கர்பிரிண்ட் சென்சாரை s5 போனில் புகுத்த உள்ளார்கள். கைரேகை சென்சாரை பயன்படுத்துவதன் முலம் மொபைலானது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் இது ஏற்கனவே ஆப்பிளில் இருப்பது தான்.

#3

#3

முன்னதாக S4 போனில் 13 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டது மற்றும் சூம் லென்சும் இருந்தது. ஆனால் s5-ல் வரவருக்கும் கேமிராவில் 20 மெகா பிக்சல் ரெசொலிஷன் உள்ள கேமிரா இருப்பதாக கூறப்படுகிறது. மேலுல் 2x,3x வசதியுள்ள சூமிங் ஆப்ஷன்ஸூம் உள்ளது

#4

#4

சாம்சங் கேலக்ஸி s5ல் 1080 பிக்சல் கொண்ட வீடியோ ரெக்காடிங் பொருத்தப்பட்டுள்ளது. இது 60fps மற்றும் ois(optical image stabilization)உதவியுடன் இயங்கும்.

#5

#5

சாம்சங் இதற்க்கு முன் நிறைய மாடல்களை வெளியிட்டிருந்தாலும் அதில் சிறு குறைகள் இருந்து வந்தது ஆனால் இந்த S5 போனில் பிரீமியம் பில்ட் குவாலிட்டி கொண்டுவருவதால் இது போன்ற குறைபாடு வரவாய்ப்பில்லை.

#6

#6

சாம்சங் s5ல் புதியதாக வாய்ஸ் காமாண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. நமது குரலின் முலம் நாம் ஃபோனை இயக்கலாம்.

#7

#7

சாம்சங் s4ல் AMOLED டெக்னலாஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இதில் சிலகுறைபாடுகள் இருந்ததை கண்டறிந்த சாம்சங் நிறுவனம் இதனை சரி செய்ய S5ல் இதைவிட சிறப்பான முறையில் AMOLED டெக்னலாஜியை பயன்படுத்தியுள்ளது. நல்ல தெளிவான கலர் மற்றும் சிறந்த பிக்சர் குவாலிட்டியை கொடுத்துள்ளார்கள்.

#8

#8

சாம்சங் s4 அவ்ட்டோர் விசிபிலிடி குறைவாகக் காணப்பட்டது அதவது ஃபோனை சூரிய வெளிச்சத்தில் கண்டால் விசிபிலிடி குறைவாகத் தெரியும் இதனை சரி செய்ய s5ல் விசிபிலிடியை அதிகப்படுத்தியள்ளனர்.

#9

#9

சாம்சங் S5ல் 64-பிட் பிராஸஸ்ஸசர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இதன் வேகம் முந்தைய மாடல்களை விட அதிகமாக இருக்கும்.

#10

#10

சாம்சங் s4ல் ஸ்ட்டிரீயோ ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருந்தது அது சிறப்பானதாகவும் இருந்தது. இருந்தாலும் ஒலியின் தன்மையை கூட்டுவதற்க்காக S5ல் டிப்பர் ஸ்ட்டிரீயோ ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது இதன் முலம் தெளிவான ஒலியை கேட்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X