உங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள்! அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

|

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் அல்லது போன் இல்லாத ஒருவரைக் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்ற செயலாகும். உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட போன்களை எப்பொழுதும் நம் கைகளிலேயே வைத்திருக்கிறோம். ஆனால், இவற்றை வைக்கவே கூடாத 10 ஆபத்தான இடங்களும் உள்ளது அவற்றை பார்க்கலாம்.

உங்கள் சாதனத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் ஆபத்தான இடங்கள்

உங்கள் சாதனத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் ஆபத்தான இடங்கள்

எப்பொழுதும் நம்முடனே பயணம் செய்யும் போன்களை நாம் மழை, வெயில், படுக்கை மற்றும் ஏன் இன்னும் சிலர் பாத்ரூமில் கூட போனுடன் தான் செல்கின்றனர். போகும் எல்லா இடங்களுக்கும் நமது போன்களை தூக்கிச் செல்லும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம். இருப்பினும் கூட, உங்கள் போன்களை சில இடங்களில் வைத்திருப்பது என்பது உங்கள் சாதனத்திற்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு

நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு

உங்கள் செல்போனை வைக்கவே கூடாத 10 இடங்களின் பட்டியலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார். இவர்கள் பட்டியலிட்டுள்ள தவறுகளை நம்மில் பெரும்பாலானோர் செய்து வருகிறோம் என்பதே உண்மை. உங்கள் சாதனத்தையும் உங்களையும் எப்படிப் பாதுகாப்பாக ஆரோக்கியத்துடன் பார்த்துக்கொள்வது என்று தெளிவாக அறிந்துகொள்ள இந்த பதிவின் இறுதி வரை தொடர்ந்து படிக்கவும்.

மேகத்திற்குள் போர் விமானத்தை மறைத்து ஓட்டுபவர்களின் கவனத்திற்கு!மேகத்திற்குள் போர் விமானத்தை மறைத்து ஓட்டுபவர்களின் கவனத்திற்கு!

1. பின் பாக்கெட்

1. பின் பாக்கெட்

உங்கள் ஸ்மார்ட்போனை, உங்கள் பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் வைப்பது என்பது இப்பொழுது ஸ்டைலாகிவிட்டது. இன்னும் சிலருக்கு இங்கு வைப்பது நிச்சயமாக மிகவும் வசதியானதாக இருக்கலாம், ஆனால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பின்வரும் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. முதலில் உங்கள் போனில் ஊழல் டச் ஸ்கிரீன் உங்கள் பின்புறத்தில் பட்டு ஆன் செய்யப்பட்டு சூடாக வாய்ப்புள்ளது.

இந்த வலிக்கும் இதற்கும் 'இது'தான் காரணம்!

இந்த வலிக்கும் இதற்கும் 'இது'தான் காரணம்!

போனை பின்புறத்தில் வைப்பதினால் அதிகப்படியான எமெர்ஜெண்சி அழைப்புகளை அழைக்கவும் வாய்ப்புள்ளது. பயனருக்கே தெரியாமல் அவசர உதவி எண்ணை அழைத்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உங்கள் வயிறு மற்றும் கால்களில் நீங்கள் அடிக்கடி வலியை உணர்கிறீர்களா? அப்படியானால் அதற்கு உங்களுடைய இந்த பழக்கம் தான் காரணம். அதேபோல், போனை உடைப்பதற்கும், இழப்பதற்கும் வாய்ப்பு இதனால் அதிகம்.

2. முன் பாக்கெட்

2. முன் பாக்கெட்

ஆண்கள் வெளியில் செல்லும் போது கைப்பையை எடுத்துச் செல்வதில்லை, எனவே அவர்கள் போனை முன் பாக்கெட்டில் வைப்பது தான் மிகவும் வசதியானது. ஆனால் இதன் காரணமாக ஆண்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும். ஸ்மார்ட்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சு விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை மோசமாகப் பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 10 விஷயம் தெரியலான ஸ்மார்ட்போன் யூஸ் பண்றது வேஸ்ட்! 'சீக்ரெட் டிப்ஸ' மிஸ் பண்ணாம படிங்க!இந்த 10 விஷயம் தெரியலான ஸ்மார்ட்போன் யூஸ் பண்றது வேஸ்ட்! 'சீக்ரெட் டிப்ஸ' மிஸ் பண்ணாம படிங்க!

ஆண்மை குறைவிற்கு முக்கிய காரணம் இதுதானா! உண்மையா?

ஆண்மை குறைவிற்கு முக்கிய காரணம் இதுதானா! உண்மையா?

பல ஆய்வுகள் இதை நிரூபித்தும் உள்ளது. பெரும்பாலான ஆண்களின் உடலுறுப்புநோய்களுக்கு பின்னணியில் ஸ்மார்ட்போனின் கதிர்வீச்சு காரணமாக கூறப்படுகிறது. ஆண்மை குறைவிற்கு இந்த பழக்கமே முதல் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் போனை பேண்ட்டில் வைத்துள்ளீர்களோ அவ்வளவு ஆபத்து ஏற்படும் என்பதை மறக்காதீர்கள்.

3. பெண்களின் ப்ராக்குள் போன்

3. பெண்களின் ப்ராக்குள் போன்

பேண்ட் அணியும் பழக்கமில்லாத சில பெண்கள் போனை வைப்பதற்கு இடம் இல்லாமல் அவர்களின் ப்ராவில் போனை வைத்துப் பயன்படுத்துகிறார்கள். செல்போன் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துகிறதா என்பது குறித்த தெளிவான விளக்கம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், சில விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ப்ராவில் உள்ள போன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர். எனவே அதை அங்கே வைக்காமல் இருப்பது நல்லது.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

4. உங்கள் இடுப்பில்

4. உங்கள் இடுப்பில்

பேண்ட் அணியும் பழக்கமில்லாத சில பெண்கள் மற்றும் ஆண்கள் போன்களை இடுப்பு பகுதியில் சொருகி வைக்கிறார்கள், ஆராய்ச்சியின் முடிவுபடி, உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் தொடையின் அருகே கொண்டு செல்வது இடுப்பு எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு இடுப்பு வலி, முதுகுத் தண்டு வலி ஆகிய வலிகள் ஏற்படுகிறது. ஆகையால் உங்கள் எலும்புகளைப் பாதுகாத்துக்கொள்ள, சாதனத்தை அடர்த்தியான பையில் வைத்துப் பழகுங்கள்.

5. உங்கள் சருமத்திற்கு எதிரான ஆபத்து

5. உங்கள் சருமத்திற்கு எதிரான ஆபத்து

உங்கள் செல்போனை உங்கள் சருமத்துடன் ஒட்டும்படி வைத்து பயன்படுத்த வேண்டாம். நீங்கள் இதைச் செய்யும்போது, மொபைல் திரையில் இருக்கும் பாக்டீரியா மற்றும் தூசிகள் உங்களின் முகத் தோலுக்கு மாற்றப்படுகிறது. இதனால் சரும கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் மின்காந்த கதிர்வீச்சு இன்னும் நெருக்கமாகிறது. எப்பொழுதும் உங்கள் சாதனத்திற்கும் உங்கள் தோலுக்கு இடையில் குறைந்தது 0.5-1.5 செ.மீ. இடைவெளிவிட்டுப் பழகுங்கள்.

6. சார்ஜிங் பழக்கம்

6. சார்ஜிங் பழக்கம்

உங்கள் போனை சார்ஜ் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்காது, ஆனால், உங்களுக்கு அருகில் வைத்து சார்ஜ் செய்வது தீங்கு விளைவிக்கக்கூடும். போன் உங்களுக்கு நெருக்கமாக இருந்தால் மின்காந்த கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். உங்கள் போனை இரவு முழுதும் சார்ஜிங்கில் வைக்காமல் இருப்பது நல்லது. இரவு முழுதும் சார்ஜ் செய்யும் பழக்கம், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளைக் குறைத்து பேட்டரியின் செயல்திறனைக் குறைக்கிறது.

7. குளிர் இடங்கள்

7. குளிர் இடங்கள்

வெளியில் குளிர்ச்சியாகவும், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் குறைவாகவும் இருந்தால், உங்கள் போனை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ளுங்கள். காரில் நீண்ட நேரம் அதை விட்டுவிடாதீர்கள். வெப்பநிலை வேறுபாடு கேஜெட்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குளிர் இடத்திலிருந்து மீண்டும் ஒரு சூடான இடத்திற்கு உங்கள் போன் வரும்போது, நீர்த்துளிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது சிக்கலை உருவாக்கும். அடிக்கடி உங்கள் போனை பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.

காலத்தால் மறைக்கப்பட்ட இரகசியம்: நியூட்டன், ஐன்ஸ்டீனை விட அதிக IQ! மறைக்கப்பட்ட மர்மம் இதுதான்!காலத்தால் மறைக்கப்பட்ட இரகசியம்: நியூட்டன், ஐன்ஸ்டீனை விட அதிக IQ! மறைக்கப்பட்ட மர்மம் இதுதான்!

8. சூடான இடங்கள்

8. சூடான இடங்கள்

குளிர் இடங்களை போல, அதிக சூடான வெப்பநிலை இடங்களும் உங்கள் போனிற்கு தீங்கு விளைவிக்கும். வெப்பமான காலநிலையில், உங்கள் ஸ்மார்ட்போனை காரிலோ அல்லது கடற்கரையிலோ விட்டுவிடாதீர்கள். குறிப்பாக வீட்டில் சமையல் செய்யும் பெண்கள் போனை அடுப்புக்கு அருகில் மறந்து வைத்துவிடாமல் இருப்பது நல்லது.

9. ஈரமான இடங்கள்

9. ஈரமான இடங்கள்

பொதுவாகவே ஈரமான இடங்களுக்கு மின் சாதனங்களைக் கொண்டு செல்வது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். ஸ்மார்ட்போனை பாத்ரூமிற்கு எடுத்து செல்லும் நண்பர்களுக்கு இது நிச்சயம் கருத்தில்கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பாத்ரூமில் சார்ஜ் செய்யும் பழக்கத்தை எப்பொழுதும் செய்யாதீர்கள். இது உங்களின் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

10. தலையணைக்கு அடியில்

10. தலையணைக்கு அடியில்

உங்கள் தலையணையின் கீழ் உங்கள் போனை வைக்க வேண்டாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளது, இரவில், நோட்டிபிகேஷன் வந்தால் அது உங்களின் உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கிறது. இது உங்களுக்குத் தேவைப்படும் உறக்கத்தைக் கெடுக்கிறது. சரியான தூக்கம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் படுக்கையில் இருக்கும் போனிலிருந்து வெளிவரும் நீண்ட நேர மின்காந்த கதிர்வீச்சு தலைவலி மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது.

ஸ்மார்ட்போன் வெடிப்புகள் மற்றும் தீ விபத்து

ஸ்மார்ட்போன் வெடிப்புகள் மற்றும் தீ விபத்து

குறிப்பாக ஸ்மார்ட்போன் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை தலையணையால் மூடும்போது, ​​இதற்கான வாய்ப்புகளை நீங்களே அதிகரிக்கிறீர்கள். சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பம் வெளியேறுகிறது, தலையணையின் துணிக்கு அடியில் இருக்கும் பொழுது இந்த வெப்பம் இருமடங்காகிறது. எப்பொழுது படுக்கையைவிட்டு உங்கள் போன் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் தள்ளி இருப்பது நல்லது.

நண்பர்களுடன் பகிர்ந்து பாதுகாப்பாக இருங்கள்

நண்பர்களுடன் பகிர்ந்து பாதுகாப்பாக இருங்கள்

இந்த உதவிக்குறிப்புகள் ஆச்சரியமாகத் தோன்றலாம், ஆனால் நிச்சயம் இவை உங்களின் உடல்நலம் மற்றும் உங்கள் போனின் ஆயுளைப் பாதிக்கக்கூடியவை தான். ஆகையால் நீங்கள் இந்த பதிவின் மூலம் படித்துத் தெரிந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் தான் இது.

Best Mobiles in India

English summary
10 Dangerous Places Where It’s Not a Good Idea to Keep Your Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X