2018-ம் ஆண்டின் சிறந்த 10 அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்.!

2018ல் வெளியான அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தப்பட்ட கவரக்கூடிய வடிவமைப்பு மற்றும் தற்போது சந்தையில் உள்ள சிறந்த நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளன.

|

சில பிரீமியம் போன்களை பொறுத்தமட்டில் இந்த 2018 ஆம் ஆண்டு அதிக பலனளிக்கும் ஆண்டாகவே இருந்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் முதன்மையான ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அல்ட்ரா பிரீமியம் போன்கள் மேம்படுத்தப்பட்டு, அதன் முன்னோடிகள் காட்டிலும் சிறப்பான சில புதுமையான அம்சங்களுடனும் வெளிவந்துள்ளன.

2018-ம் ஆண்டின் சிறந்த 10 அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்.!

2018ல் வெளியான அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தப்பட்ட கவரக்கூடிய வடிவமைப்பு மற்றும் தற்போது சந்தையில் உள்ள சிறந்த நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளன.2018ம் ஆண்டின் சிறந்த பிரீமியம் போன்களின் பட்டியலை இங்கே காண்போம்.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்/எக்ஸ்எஸ் மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்/எக்ஸ்எஸ் மேக்ஸ்

பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவு என்றாலே அதில் டாப்-ல் இருப்பது ஆப்பிளின் புதிய தலைமுறை ஐபோன்கள். இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் ஆகிய இரண்டும் வீடியோ ரெக்கார்டிங்க்காக அதிக சக்திவாய்ந்த கேமராக்களை கொண்டுள்ளன. இவை அதிக செயல்திறனை வழங்கும் பொருட்டு ஆப்பிளின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஏ12 பயோனிக் சிப்செட்டும் உள்ளது. ஐபோன் எக்ஸ்எஸ்-ல் உள்ள 5.8இன்ச் திரையும் மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்-ல் உள்ள 6.5இன்ச் திரையும், சூப்பர் ரெட்டினா எச்டி திரைகள்.ரூ99,990 விலையில் கிடைக்கும் ஐபோன் எக்ஸ்எஸ் க்ரே, சில்வர் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ரூ1,04,990 விலையில் கிடைக்கும் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ்-ம் ஸ்பேஸ் க்ரே மற்றும் சில்வர் கோல்டு நிறத்தில் கிடைக்கின்றன.

கூகுள் பிக்சல் 3/ பிக்சல் 3 எக்ஸ்எல்

கூகுள் பிக்சல் 3/ பிக்சல் 3 எக்ஸ்எல்

முதன்மையான ஸ்மார்ட்போன்களை பற்றி பேசும் போது, பிக்சல் 3 டியோ போன்களை தவிர்க்கமுடியாது.சுமமூகமான பயனர் அனுபவத்திற்காக ஸ்டாக் ஆண்ராய்டு பயனர் இடைமுகம் போன்ற சில உயர்தர வசதிகளை வழங்குகிறது கூகுள் நிறுவனம்.இதிலுள்ள சக்திவாய்ந்த சிங்கிள் லென்ஸ் பின்புற கேமரா மூலம் எடுக்கப்படும் படங்களின் தரம், மற்ற எந்தவொரு சிங்கிள் அல்லது டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன்களில் கிடைக்காது. அக்டோபர் மாதம் நியூயார்க்-ல் நடந்த மேட் பை கூகுள் நிகழ்ச்சியில் கூகுள் பிக்சல் 3 அறிவிக்கப்பட்டது. 5.5இன்ச் P-OLED திரை கொண்ட பிக்சல் 3ன் விலை ரூ66,500 மற்றும் இது தூய வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.6.3இன்ச் P-OLED திரை கொண்ட பிக்சல் 3XLன் விலை ரூ78,500 மற்றும் இது தூய வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ

ஹூவாய் மேட் 20 ப்ரோ

2018ன் மூன்றாவது அல்ட்ரா ப்ரீமியம் ஸ்மார்ட்போனான இது, அக்டோபர் 2018ல் வெளியிடப்பட்டு இந்திய சந்தையில் நவம்பர் மாத இறுதியில் வந்தது. கிரின் 980 சிப்செட்உள்ள இந்த போன் தான் சந்தையில் கிடைக்கும் அதிசக்திவாய்ந்த போன். உயர் தர அம்சங்களை வழங்கும் இந்த போனில், மூன்று பின்புற கேமரா சென்சார்கள் உள்ளன. f/1.8 aperture உடன் கூடிய 40MP ப்ரைமரி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா, f/2.2 aperture உள்ள 20MP அல்டரா வைட் ஏங்கிள் சென்சார், f/2.4 aperture உள்ள 8MPடெலிபோட்டோ லென்ஸ் ஆகியன உள்ளன. இந்தியாவில் ரூ69,990 என்ற விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், கருப்பு, டிவ்லைட், மிட்நைட் ப்ளு மற்றும் கிரீன் நிறங்களில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9

சாம்சங் கேலக்ஸி நோட் 9

கண்கவரும் வடிவமைப்பில் பல்வேறு உயர்தர அம்சங்கள் கொண்ட இந்த கேலக்ஸி நோட் 9 மொபைல் 2018 பிரீமியம் போன் பட்டியலில் நான்காவதாக உள்ளது. ஆகஸ்ட்டில் வெளியானது இந்த போன், 2018ல் வெளியான மிக பிரபல சாம்சங் ஸ்மார்ட்போன் ஆகும். குறிப்பிட்ட செயல்பாடுகளை எளிதில் முடிக்கும் வகையில் ஸ்டைலஸ் எஸ்-பென் உள்ளது. ஸ்னாப்டிராகன் 845/ எக்ஸினாஸ் 9810 ஆக்டா சிப் மற்றும் 6GB ரேம் உள்ள இதில் மல்டிடாஸ்க்கிங் சுலபமாக செய்யலாம். ரூ67,900 என்ற விலையில் கிடைக்கும் இந்த போன் மிட்நைட் ப்ளேக், மெடாலிக் காப்பர் மற்றும் ஓசன் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்9/ எஸ்9 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்9/ எஸ்9 ப்ளஸ்

2018ன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ள இந்த இரு போன்களும், சில நவீன வசதிகள், பிரீமியம் பயனர் அனுபவம் மற்றும் வெளிப்புற தோற்றம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளன. எஸ்9 ல் உள்ள 5.8 இன்ச் திரையும், எஸ்9 ப்ளஸ்-ல் உள்ள 6.2 இன்ச் திரையும் சூப்பர் AMOLED ‘Infinity Display' கொண்ட முக்கிய அம்சமாகும். கேலக்ஸி எஸ்9 ரூ57,900 என்ற விலையிலும், எஸ்9 ப்ளஸ் ரூ52,900 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஒன்ப்ளஸ் 6டி

ஒன்ப்ளஸ் 6டி

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒன்ப்ளஸ், 2018ன் பிரீமியம் போன்கள் பட்டியலில் 6ம் இடம் வகிக்கிறது.அக்டோபர் 2018ல் ஒன்ப்ளஸ் 6டி அறிவிப்பு வெளியான நிலையில், ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சியின் காரணமாக திட்டமிட்ட தேதியில் இருந்து பின்னர் வெளியிடப்பட்டது. அலுமினியம் பிரேம் மற்றும் பின்புற கண்ணாடி வடிவமைப்பு கொண்ட இந்த போனில், மல்டிடாஸ்க்கிங் செய்ய ஏதுவாக, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6GB ரேம் உள்ளது. 6.41-இன்ச் ஆப்டிக் AMOLED பேனல் திரையானது 1080 x 2340 பிக்சல் ரெசல்யூசன் மற்றும் 402 ppi பிக்சல் டென்சிட்டி கொண்டது.3,700mAh non-removable Li-Po பேட்டரி உள்ள இது , இந்தியாவில் ரூ37,999 என்ற விலையில் மிட்நெட் ப்ளேக் மற்றும் மிர்ரர் பிளேக் என இரு நிறங்களில் கிடைக்கிறது.

10GB ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6T McLaren Edition ரூ50,999என்ற விலையில் கிடைக்கிறது.

ஆசுஸ் ராக் போன்

ஆசுஸ் ராக் போன்

ஜூன் மாதம் வெளியான தய்வான் நாட்டின் கேமிங் ஸ்மார்ட்போனான இது இந்தியாவில் நவம்பர் வெளியானது. சிறந்த கேமிங் அனுபவத்தை தரும் வகையில் 6-இன்ச் Full HD+ AMOLED HDR 9-Hz, 1ms response time AMOLED + DCIP3 gamut திரை உள்ளது. ஸ்னாப்டிராகன் 845 SoC 2.96GHz ப்ராஸ்சஸ்சர்உடன் உள்ள 8GB ரேம் மல்டி டாஸ்கிங் செய்ய உதவுகிறது. இந்த ராக் போனின் விலை ரூ69,990.

எல்ஜி வி40 திங்க்

எல்ஜி வி40 திங்க்

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் பட்டியிலில் 8வது இடம் பிடித்த இந்த போனை கடந்த அக்டோபர் மாதம் தென்கொரிய நிறுவனமான எல்ஜி வெளியிட்டது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் Adreno 630 ஜிபியு உள்ள இந்த போன் கிராபிக்ஸ் தொடர்பான டாஸ்க் செய்ய சிறப்பானது. 6GB ரேம், 64GB சேமிப்புதிறன் மற்றும் மெமரிகார்டு மூலம் 512GB வரை சேமிப்பை நீட்டிக்கும் வசதிபோன்ற அம்சங்களை கொண்ட இதன் விலை இந்தியாவில் ரூ72,490.

விவோ நெக்ஸ்

விவோ நெக்ஸ்

பேசில் இல்லாத வடிவமைப்பை வழங்கும் வகையில் பாப்அப் ஸ்லைடர் கேமரா கொண்ட முதல் ஆண்ராய்டு ஸ்மார்ட்போன் இது. மேலும் இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இன்டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.6.59-இன்ச் சூப்பர் AMOLED 1080 x 2160 பிக்சல் திரை கொண்ட இந்த போனில், ஸ்னாப்டிராகன் 845சிப்செட் மற்றும் 8GB ரேம் போன்றவை மூலம் விரைவாக மல்டி டாஸ்க்கிங் செய்ய முடியும்.முதன்மையான ஸ்மார்ட்போனான இது ரூ44,990 என்ற விலையில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது.

ஓப்போ பைன்ட் எக்ஸ்

ஓப்போ பைன்ட் எக்ஸ்

விவோ நெக்ஸ் போலவே பேசில் இல்லாமல் பாப்அப் ஸ்லைடர் கேமரா இந்த போனிலும் சிறப்பம்சமாக உள்ளது. கண்ணாடி பின்புறம் மற்றும் அலுமினியம் ப்ரேம் உள்ள இது, மிகவும் மெலிசான வடிவமைப்பை கொண்டது. இதில் 16MP f/2.0 aperture முதன்மை சென்சார் மற்றும் 20MP f/.0 aperture இரண்டாவது சென்சார் என டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஸ்னாப்டிராகன் 845 மற்றும் 8GB ரேம் உள்ள இந்த போன் ரூ58,000 என்ற விலையில் சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றன

Best Mobiles in India

English summary
10 best ultra-premium smartphones of 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X