Subscribe to Gizbot

சோனி எக்ஸ்பீரியா இசட் 3யின் கேமரா அம்சங்கள், இந்த 10 அமசங்கள் உங்களுக்கு பிடிக்கும்

Posted By:

இந்திய சந்தையில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் சோனி நிறுவனமும் இடம்பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை அந்நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த ஜப்பான் நிறுவனம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து பல பொருட்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. இதன் மியுசிக் ப்ளேயர்களில் இருந்து இப்போதைக்கு வெளியாகியிருக்கும் ப்ளே ஸ்டேஷன் 4 வரை இந்நிறுவனம் மிகப்பெரிய வெற்றிகளை பார்த்திருக்கின்றது. சோனியின் வெற்றி மகுடத்தை அலங்கரிக்கும் அணிகலனாக சோனி ஸ்மார்ட்போன் வியாபாரமும் அமைந்தது.

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 இதற்கு புதிய எடுத்துக்காட்டு, இந்த புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற மாடல் போன்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. சோனி எக்ஸ்பீரியா இசட் 3, ரூ.48,000 என்ற விலையில் 5.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஃபுல் எஹ்டி ரெசல்யூஷனான 1920*1080 பிக்சல்களை வழங்குகிறது.

இந்த டிஸ்ப்ளே சோனியின் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளேவை கொடுக்கிறது, இது எக்ஸ்-ரியால்டி படங்களை அளிக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 எஸ்ஓசி 205 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு மற்றும் 4ஜி எல்டிஈ மோடெம் மற்றும் அட்ரீனோ 330ஜிபியு கொண்டுள்ளது. மேலும் இதில் 3 ஜிபி ராமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது கூகுளின் ஆந்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. கேமராவை பொருத்தவரை ஆட்டோபோக்கஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 20.7 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2.2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

இந்த அம்சங்கள் மற்ற போன்களில் இருந்தாலும் இது மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவம் வாய்ந்தது என்பதை விளக்கும் விதமாக இதன் கேமராவை குறிப்பிடலாம். சோனி எக்ஸ்பீரியா இசட் 3யின் கேமரா மூலம் என்ன செய்ய
முடியும் என்பதை இங்கு பாருங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேமரா சென்சார், ஐஎஸ்ஓ டெஸ்ட்

1

இதுவரை வெளியானதில் எக்ஸ்பீரியா இசட் மாடலில் தான் அதிகபட்சமாக 12800 ஐஎஸ்ஓ உள்ளது, எனவே இதன் கேமரா சென்சார் மற்ற போன்களை விட அதிகம். இந்த போன் மூலம் இருள் சூழ்ந்த இடத்திலும் அற்புதமான படங்களை எடுக்க முடியும், இருளில் இந்த கேமராவின் தரத்தை வேறு எந்த ஸ்மார்ட்போன் கேமராவுடனும் ஒப்பிடவே முடியாது. இதற்கு முன் வெளிவந்த சோனி தயாரிப்புகளில் இதுவே சிறந்தது என்றும் கூறலாம்.

கேமரா மற்றும் ஹான்டிகேம்

2

சிறப்பான வாட்டர் ப்ரூபிங் அளிப்பதுடன் சோனி ஹான்டிகேம் வசதயில் எந்த குறையும் வைக்கவில்லை. ஸ்மார்ட்போன்களில் வீடியோ எடுப்பது முக்கியமாக கருதப்படும் நிலையில் இதன் க்ளாரிட்டி அனைவரையும் வியக்க வைக்கும் படி அமைந்துள்ளது. வீடியோக்களை பொருத்தவரை நிஜத்தை பிரதிபலிப்பது ஒரு புறம் இருந்தாலும் 4கே வசதி இருப்பதால் அதை எடிட் செய்வது எளிமையாக அமைகிறது.

ஸ்டெடிஷாட்

3

ஸ்டெடிஷாட் தொழில்நுட்பம் வீடியோ பதிவு செய்யும் போது சிறு அசைவுகள் ஏற்பட்டாலும் வீடியோவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கின்றது. இது ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் அவசியம் இருக்க வேண்டும். போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்கும் போது நிச்சயம் உங்கள் கை அசைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இதன் வீடியோ தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, விளைவு அற்புதமான வீடியோ மற்றும் போட்டோக்கள்.

வாட்டர் ப்ரூப் சோதனை

4

ஆரம்பத்தில் இருந்து எக்ஸ்பீரியா கேமராக்கள் நீரில் இயங்கி வரும் நிலையில், இது எக்ஸ்பீரியா இசட் 3 மாடலிலும் தொடர்கிறது. போன் நீரில் நனைந்தால் கவலை வேண்டாம் இந்த மாடலில் தரமான வாட்டர் ப்ரூபிங் இருப்பதோடு இதை நிரூபிக்க நீரிலும் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் குளத்தினுள் எடுக்கப்பட்ட படங்களிலும் சரியான தரம் தெரிந்ததோடு நீரின் விவரங்களும் தத்ரூபமாக தெரிந்தது.

பெரிய லென்ஸ்

5

சோனியின் அதிகார்ப்பூரவ செல்பீ போனாக எக்ஸ்பீரியா இசட் 3 மாடலை குறிப்பிடலாம், ஆனால் இதில் குழுவாக செல்பி எடுப்பது சிரமமான காரியம். எக்ஸ்பீரியா இசட் 3யின் ஜி லென்ஸ் அதிக வெளிச்சத்தை பயன்படுத்தும். 25 எம்எம் அகலமான லென்ஸ் பயன்படுத்துப்படுவதால் சோனியில் ப்ரேம்களை வைப்பது சுலபமாக அமைகிறது. படங்களில் வண்னங்கள் அற்புதமாக பிரதிபலிப்பது சோனியின் தரத்திற்கான எடுத்துக்காட்டு.

4கே சோதனை

6

பொதுவாக 4கே என்பது ஃபுல் எஹ்டி தரத்தைவிட 4 மடங்கு அதிக தரம் என்று குறிப்படலாம், ஆனால் 4கே வீடியோ தரத்தை பற்றி வார்த்தைகளால் கூறவே முடியாது ஏனென்றால் இந்த தரத்தை வீடியோ மூலம் பார்த்தால் மட்டும் தான் உணர முடியும். மேலும் சந்தையில் கிடைக்கும் மற்ற மாடல் போன்களில் இந்த அம்சம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படம்

7

எக்ஸ்பீரியா இசட் 3யில் பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் பெரும்பாலானோர் அவற்றை கணினிக்கு மாற்ற முயற்ச்சிப்பார்கள், இங்கு அந்த அவசியம் இல்லை. இங்கு உங்களின் படங்கள் வீடியோவாக இணைக்கப்ப்டும், இதை நீங்கள் உங்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஏஆர் அட்ஜெஸ்ட்மென்ட்ஸ்

8

ஒவ்வொரு படத்தை எடுப்பதற்கு முன்பும் பல ஆப்ஷன்களை பயன்படுத்தி படம் நன்கு தெரிய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள், படம் எடுத்து முடித்த பின்னரும் அதை எடிட் செய்து பார்ப்பார்கள். ஆனால் சோனி உங்களின் படங்கள் சிறப்பாக காட்சியளிக்க பல அம்சங்களை கொண்டுள்ளது. புதிய ஏஆர் அம்சத்தின் மூலம் உங்க படத்தின் மேல் பகுதியில் உங்களுக்கு பிடித்ததை வரைந்து கொள்ளலாம், இதில் ப்ரீ-க்ளிக் என்ற அம்சமும் பரிசோதிக்கப்பட்டது அதன் விளைவு அற்புதமாக அமைந்தது.

கேமரா ஆப்ஸ்

9

எக்ஸ்பீரியா இச்ட் 3 மாடலில் பல கேமரா ஆப்ஸ்கள் உங்கலை கவரும் விதமாக அமாந்துள்ளது. இவை சோனிக்காகவே ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அப்ளிகேஷனும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் மல்டி கேமரா ஆப்ஷன் மூலம் பல்வேறு படங்கள் மற்றும் வீடியோக்களை பல கோணஹ்களில் எடுக்க முடியும்.

அதிக ஆப்ஸ்

10

எக்ஸ்பீரியா இசட் 3யில் பல கேமரா அம்சங்கள் இருந்தும் இணையத்தில் தேட ஆரம்பித்தால் அங்கும் உங்களுக்கு நிறைய அப்ளிகேஷன்கள் கிடைக்கும். அதன் எடுத்துக்காட்டாக சவுன்டு போட்டோ பீச்சரை கூறலாம், இது நீங்க போட்டோ எடுக்கும் போது அந்த இடத்தில் இருந்த சத்தத்தையும் பதிவு செய்து கொள்ளும். இதில் பதிவான சத்தம் சிறந்த தரத்தில் இருப்பதோடு வித்தியாசமாகவும் இருப்பதால் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
10 Amazing Things that Sony Xperia Z3 Camera Can Do for you. Here you will 10 Amazing camera features of Sony Xperia Z3.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot