முகேஷ் அம்பானியின் 'அன்டிலியா' இல்லம் பற்றிய 10 அற்புத உண்மைகள்..

|

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மீதான நமது "பாசம்" ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியது என்பது வெளிப்படை. அன்றிலிருந்து இன்று வரையிலாக அம்பானி பற்றிய செய்திகளை, தகவல்களை மற்றும் விவரங்களை தேடித்தேடி படிக்கின்றோம் அல்லவா.?

முகேஷ் அம்பானியின்  'அன்டிலியா' இல்லம் பற்றிய 10 அற்புத உண்மைகள்..

அப்படியான பிரபலத்துவம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியின் 'அன்டிலியா' இல்லம் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு புட்டுப்புட்டு வைக்கப்போகிறோம்.

#1

#1

அன்டிலியா உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். 4,00,000 சதுர அடி கொண்ட இந்த வீடு தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது.

#2

#2

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புராண தீவின் அடையாளமாக அன்டிலியா என இந்த வீட்டிற்கு பெயரிடப்பட்டது.

#3

#3

27 மாடி கட்டிடமான இதன் சில கூரைகள் இரண்டு மடங்கு உயரத்தில் இருப்பதால், 570 அடி உயரத்திலான ஒரு 40 மாடி கட்டிடத்திற்கு இணையானது.

#4

#4

இந்த பிரம்மாண்டமான இல்லத்தை பராமரிக்க உதவியாக 600 ஊழியர்கள் உள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள்/ காவலர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறை உள்ளது.

#5

#5

அம்பானியின் இல்லமானது ஆரோக்கிய ஸ்பா, சலூன் , பால்ரூம், 3 நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோஸ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

#6

#6

50 நபர்கள் அமரக்கூடிய தனிப்பட்ட தியேட்டர் இந்த வீட்டில் உள்ளது. மற்றும் இந்த தியேட்டரின் கூரையாக மாடித்தோட்டம் உள்ளது.

#7

#7

இந்த கட்டிடத்தின் ஆறு மாடிகள் 168 கார்கள் நிறுத்துமளவிற்கு பார்க்கிங் பகுதிக்கெனவே அர்ப்பணிக்கப்பட்டன.

#8

#8

இந்த கட்டிடத்தில் மட்டும் 9 லிஃப்ட்கள் உள்ளது. விருந்தினர்களுக்கும் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக லிஃப்ட்கள் உள்ளன.

#9

#9

சூரியன் மற்றும் தாமரை இரண்டு வடிவமைப்பு அலங்காரங்கள் மட்டுமே இக்கட்டிடம் முழுவதும் படிக, பளிங்கு, மற்றும் முத்து போன்ற வெவ்வேறு அரிதான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

  #10

#10

இந்த மாளிகையின் கூரையில் 3 ஹெலிபேட்கள் உள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
10 amazing facts about Mukesh Ambani's home 'Antilia': Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X