Home
Mobile

VIVO-வின் "வச்சி செய்யும்" மொமெண்ட்.. பக்கா பட்ஜெட்டில்.. 10 5G பேண்ட்களுக்கான ஆதரவுடன் புதிய போன்!

5ஜி ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் மோட்டோரோலா, சாம்சங், ரெட்மி, லாவா போன்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் முனைப்பின் கீழ், விவோ நிறுவனம் ஒரு "வெயிட்டான":ஸ்மார்ட்போனை மார்ச் 21 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அதென்ன மாடல்? என்ன விலை? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? விவோ நிறுவனம் அதன் டி சீரிஸின் கீழ் விவோ டி3 5ஜி (Vivo T3 5G) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் மார்ச் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும். விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் (Landing Page) ஆனது பிளிப்கார்ட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால், அறிமுகத்திற்கு பின்னர் இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாகவே வாங்க கிடைக்கும்.

10 5G பேண்ட்களுக்கான ஆதரவுடன் புதிய VIVO போன்!

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (SONY IMX882 Sensor) உடனான 50எம்பி மெயின் கேமரா பயன்படுத்தப்படும் என்பதும், அதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவும் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் கேமரா செட்டப்பில் 30எஃப்பிஎஸ்-ல் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறன் (4K Video Recording in 30FPS) மற்றும் 2எக்ஸ் போர்ட்ரெய்ட் ஜூம் (2x Portrait Zoom) அம்சமும் இருக்கும்.

50எம்பி மெயின் கேமராவுடன் ஒரு டெப்த் சென்சார் (Depth Sensor) மற்றும் ஒரு ஃப்ளிக்கர் சென்சாரும் (Flikker Sensor) இடம்பெறும். அதாவது விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) இருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை, இது டைமன்சிட்டி 7200 சிப்செட் (Dimensity 7200 Chipset) மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 5G பேண்ட்களுக்கான ஆதரவுடன் புதிய VIVO போன்!

இந்த ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆக இருக்கலாம். இது பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம். கூடவே இதில் 1டிபி வரை மெமரியை விரிவாக்குவதற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் (MicroSD card slot) இருக்கலாம்.

பேட்டரியை பொறுத்தவரை, விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனில் 44W பாஸ்ட்சார்ஜ் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். எல்லாவற்றை விட முக்கியமான இந்த விவோ போன் 10 5ஜி பேண்டுகளுக்கான (10 5G Bands) ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

10 5G பேண்ட்களுக்கான ஆதரவுடன் புதிய VIVO போன்!

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இதில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1800 nits peak brightness) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். செல்பீ கேமராவிற்காக டிஸ்பிளேவின் மேல் பக்கத்தில் சென்டர் பஞ்ச் ஹோல் இடம்பெறலாம்; அதில் 16எம்பி சென்சார் இடம்பெறலாம். மேலும் இந்த போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் (Dual Stereo Speakers) வரும் என்றும், ஐபி54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

என்ன விலைக்கு வரும்? விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் - கிரிஸ்டல் ஃபிளாக் மற்றும் காஸ்மிக் ப்ளூ. இரண்டுமே தனித்துவமான வடிவமைப்புடன் வரும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.22,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.21,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மற்ற ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை.. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) ஆகியவைகளை கூறலாம். விவோ டி3 5ஜி மாடலை போலவே இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்குமான லேண்டிங் பேஜ்களும் கூட பிளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 5G Bands Support 50MP Sony Camera 44W Fast Charging Vivo T3 5G Launching in India on March 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X