குறைந்த விலையில் அசத்தும் அமேசான் 10.ஆர்டி2 ஸ்மார்ட்போன்.!
கடந்த சில நாட்களுக்கு முன் அமேசான் நிறுவனம் ரூ.6999க்கு வாஷிங் மெஷின்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் 10ஆர்டி2 என்ற பெயரில் இந்தியாவில் ஸ்மார்ட் போன்னை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலைக்கு விற்பனைக
இந்தியாவில் முன்னணியில் உள்ள ஆன்லைன் நிறுவனமான அமேசான் தற்போது, இருக்கின்றது. தற்போது அதன் பெயரிலேயே உருவாக்கிய தயாரிப்புகளையும் இந்தியாவில் சந்தைப்படுத்தி வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன் அமேசான் நிறுவனம் ரூ.6999க்கு வாஷிங் மெஷின்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் 10ஆர்டி2 என்ற பெயரில் இந்தியாவில் ஸ்மார்ட் போன்னை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளதால், இந்த போனுக்கும் சந்தையில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

குறைந்த வெப்பநிலையில் டிஸ்பிளே:
10 ஆர்டி2 ஸ்மார்ட்போன் குறைந்த வெப்பநிலையில் இயங்கும் பாலி சிலிக்கான் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவு. 5.46 இன்ச் டிஸ்பிளே 720 X 1440 ஹெச்டி பிக்சலிலும் திரை ரெசல்யூஷனை வழங்கின்றது. 18:9 என்ற புலன் விகிதத்தில் இயங்கும்.

32 ஜிபி உள்ளடக்கம்:
குவால்காம் ஸினாப்டிராகன் 625 எஸ்ஓசி பிராசஸர் போனில் 2 ஜிபி ரேம் 3 ஜிபி ரேம் மாடல்களில் கிடைக்கின்றது. 2 ஜிபி ரேம் உடைய மாடலின் 32 ஜிபி உள்ளடக்கம், 2 ஜிபி ரேம் உடைய மாடலில் 16 ஜிபி உள்ளடக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

144 கிராம் எடை:
144 கிராம் எடை கொண்ட இந்த அமேசான் 10.ஆர்டி 2 ஸ்மார்ட் போன். 147.7 மிமீ x 7.05மிமீ x 8.6மிமீ அளவீடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1ல் இயங்குகிறது. அமோசானின் அனைத்து செயலிகளும் இதில் உள்ளன.

3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:
சுமார் 19 மணி நேரம் தாக்குப்படிக்க கூடிய வகையில் 3200 எம்ஏஹெச் பேட்டரி இதில் இருக்கின்றது. மேலும் இதில் பல்வேறு பேட்டரி சக்தி இயக்க முறைகளும் உள்ளன.

கேமரா:
10ஆர்டி மாடலில் ஹெச்டிஆர் சென்சார் திறனுடைய 13 எம்பி பின் பக்க கேமரா மற்றும் 5 எம்பி முன் பக்க கேமரா உள்ளது. குறைந்த அளவிலான விளக்கு ஒளியில் இயங்கும் தன்மை கொண்டது.

விலை:
10.ஆர்டி2 கைபேசி 2 ஜிபி ரேம்/ 16 ஜிபி உள்ளடக்கம் உள்ள மாடல் ரூ.6999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 3 ஜிபி ரேம்/ 32 ஜிபி உள்ளடக்கம் உடைய மாடல் ரூ. 7,999 விற்பனைக்கு செய்யப்படுகின்றது.

தவணை முறை:
அமேசான் 10.ஆர்டி2 மாடல் விற்பனையகங்களுக்கு தகுந்தார் போல் மாத தவணை முறையிலும் பெற்றுக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications