சைனீஸ் போன்களுக்கு சங்கு ஊதிய LAVA.. ரூ.9000 பட்ஜெட்ல 5G, 1TB மெமரி, 8GB ரேம் போன்.. ஜூன் 5 முதல் விற்பனை!
இந்திய மார்க்கெட்டில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் சீன நிறுவனகளின் மொபைல் போன்களாகவே இருக்கின்றன. இந்த நிலையை அப்படியே தலைகீழாய் மாற்றும் நோக்கத்துடன் இந்திய மொபைல் பிராண்ட் (Indian Mobile Brand) ஆன லாவா, தொடர்ச்சியான முறையில் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த மே 30 ஆம் தேதியன்று அறிமுகமானது தான் - லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) ஸ்மார்ட்போன்!
ரூ.10,000 க்குள் இப்படி ஒரு 5ஜி ஸ்மார்ட்போனா என்று ஆச்சரியப்படுத்தும் அளவிலான அம்சங்களை பேக் செய்யும் லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூன் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? எந்த இ-காமர்ஸ் வலைத்தளம் வழியாக.. எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: லாவா யுவா 5ஜி யின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,499 க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு வேரியண்ட்களுமே மிஸ்டிக் ப்ளூ மற்றும் மிஸ்டிக் கிரீன் கலர்களில் அமேசான் இந்தியா (Amazon India), லாவா இ-ஸ்டோர் (Lava e-Store) மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக ஜூன் 5 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.
லாவா யுவா 5ஜி-யின் அம்சங்கள்: 1 வருட வாரண்டி உடன் லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இதற்கு 2 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 14-க்கான அப்டேட் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவொரு 2.5டி கர்வ்டு டிஸ்பிளேவாகும்; இதன் மேல் மையத்தில் ஹோல் பஞ்ச் கட்அவுட் டிசைனும் உள்ளது. இது 4ஜிபி ரேம் உடனான ஆக்டா-கோர் யுனிசாக் டி750 5ஜி சிப்செட் கொண்டு இயங்குகிறது. இது 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது,
கேமராக்களை பொறுத்தவரை, இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற லாவா போன்களை போலவே டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் + 2 மெகாபிக்சல் இசெகண்டரி ஷூட்டர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தில் ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவு உடனான 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ள லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூடூத் 5, வைஃபை 802.11 b/g/n/ac, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் ஆகிய இரண்டுமே உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 28 மணிநேர டால்க் டைம்-ஐ வழங்கும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 163.36x76.16x9.1மிமீ மற்றும் எடையில் 208 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications