Home
Mobile

புதுசு வந்ததும் பழைய மாடலுக்கு மிகப்பெரிய விலைக்குறைப்பு.. இந்த Motorola போன் செம்ம டிமாண்ட் ஆக போகுது!

மோட்டோரோலாவின் (Motorola) லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமான வேகத்தில், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30) மீது மிகப்பெரிய விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 புதிய விலை: இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (Storage Options) அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் மோட்டோரோலா நிறுவனமானது மோட்டோரோலா எட்ஜ் 30-யின் 8ஜிபி ரேம் ஆப்ஷனின் விலையை மட்டுமே குறைத்துள்ளது. குறிப்பிட்ட ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது ரூ.5000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு.. இந்த Motorola போன் செம்ம டிமாண்ட் ஆக போகுது!

நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் ஆப்ஷனின் அசல் விலை (Original Price) ரூ.29,999 ஆகும். ரூ.5,000 என்கிற விலை குறைப்புக்குப் பிறகு, மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது அரோரா கிரீன் (Arora Green) மற்றும் மீடியோர் கிரே (Meteor Grey) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அம்சங்கள்: மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.5 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் இந்த டிஸ்பிளே, மென்மையான ஸ்க்ரோலிங் அனுபவத்தை வழங்க 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் (144Hz Refresh Rate) கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778+ சிப்செட் (Octa-core Qualcomm Snapdragon 778+ Chipset) மூலம் இயக்கப்படுகிறது, அதனுடன் 8ஜிபி வரையிலான ரேம் சேர்க்கப்பட்டுள்ளது. இது 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது, மைக்ரோ எஸ்டி கார்டை சேர்ப்பதன் மூலம் இதன் ஸ்டோரேஜை நீட்டிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொண்டு இயங்கும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஆனது, நிறுவனத்தின் தனிப்பயனாக்கப்பட்ட மையுஎக்ஸ் இன்டர்பேஸை (Customized MyUX interface) கொண்டுள்ளது. டூயல் சிம் (Dual SIM) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 Rating) கொண்டுள்ளது, இது தற்செயலான "தண்ணீர் தெளிப்புகளில்" இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் (Splash Resistance).

5ஜி ஆதரவுடன் (5G Support) வரும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி மெயின் சென்சார் + எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார் உள்ளன.

முன்பக்கத்தை பொறுத்தவரை, 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஆனது இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (In-Display Finger Print Sensor) கொண்டுள்ளது. கடைசியாக இது 4020mAh பேட்டரியை பேக் செய்கிறது, அது 33W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங்கை (Turbo fast charging) ஆதரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
1 Year Old Motorola Edge 30 Gets Rs 5000 Price Cut in India After New Motorola Edge 40 Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X