அடிச்சு புடிச்சு வாங்கிய இந்தியர்கள்.. 28 நாளில் 10 லட்சம் யூனிட்கள் விற்பனை! என்ன மாடல்? அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்திய மக்கள் "இந்த" ஸ்மார்ட்போனை அடித்து பிடித்து வாங்கி இருக்கிறார்கள் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையை ஆரம்பித்த 28 நாட்களில் 1 மில்லியன் யூனிட்கள், அதாவது 10 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது!
அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? அடித்து பிடித்து வாங்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த ஸ்மார்ட்போனின் நிறைகள் மட்டுமே உள்ளதா? எந்த குறைகளும் இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

அதென்ன ஸ்மார்ட்போன்? நாம் இங்கே பேசுவது, கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இந்த சீரீஸின் கீழ் ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) மற்றும் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ரெட்மி 12 என்பது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும், இது பட்ஜெட்வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மறுகையில் உள்ள 5ஜி வேரியண்ட் ஆனது 5ஜி கனெக்டிவிட்டி உடன் இந்தியாவில் வாங்க கிடைக்கும் மலிவான போன்களில் ஒன்றாக உள்ளது. ஆக அதுவும் நல்ல விற்பனையை சந்தித்துள்ளது.
இவ்விரு போன்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னென்ன? ரெட்மி 12 4ஜி மற்றும் ரெட்மி 12 5ஜி ஆகிய இரண்டிற்குமான வேறுபாடுகள் 4ஜி மற்றும் 5ஜி கனெக்டிவிட்டியில் மட்டுமே வேறுபடவில்லை; கேமரா, ப்ராசஸர் மற்றும் இன்னும் சில அம்சங்களிலும் வேறுபடுகின்றன.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2460 பிக்சல்ஸ் வரை ரெசல்யூஷன் கொண்ட 6.79 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டுள்ளது. இருப்பினும், 5ஜி மாடலில் மட்டுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு (Corning Gorilla Glass Protection) உள்ளது
ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ப்ராசஸர், 8ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் 4ஜி வேரியண்ட் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட், 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளன. கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 12 5ஜி மாடலானது 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது.
இருப்பினும், ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா ,+ 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளன. செல்பீ கேமராவை பொறுத்தவரை, இரண்டுமே 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளன.
விலை நிர்ணயம்: ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டரோஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள 5ஜி வேரியண்ட் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும் வாங்க கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.10,000 க்குள் ஒரு நல்ல 4ஜி போனையும், ரூ.12,000 க்குள் ஒரு நல்ல 5ஜி போனையும் தேடும் எவருமே இவ்விரு மாடல்களையும் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது
ஆக இந்த ஸ்மார்ட்போன்களில் குறைகளே இல்லையா? நிச்சயம் உள்ளன. ரெட்மி 12 5ஜி-யில் உள்ள போர்ட்ரெய்ட் மோட்-இல் (Portrait Mode) இன்னும் சில முன்னேற்றங்கள் தேவை. அதேபோல பாஸ்ட் சார்ஜிங்கிலும் (Fast Charging) கூட மேம்பாடுகள் தேவை. கடைசியாக இதில் ப்ளோட்வேர் (Bloatwar)e உள்ளது.
மறுகையில் உள்ள ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ள குறைகளை பொறுத்தவரை, இதன் அல்ட்ராவைடு கேமரா சுமாராகவே உள்ளடி. இதன் கேமரா செட்டப்பில் உள்ள நைட் மோட் ஆனது மெயின் கேமராவில் மட்டுமே கிடைக்கிறது. கடைசியக இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இல்லை.!


Click it and Unblock the Notifications








