1 வாரத்துல.. 1 லட்சம் யூனிட்கள் காலி.. இந்த 2 Realme போன்களையும் போட்டி போட்டு வாங்கும் இந்தியர்கள்!
ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய 5ஜி மாடல்களாக ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகின. அதனை தொடர்ந்து ஜூலை 31 ஆம்தேதி முதல் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகளும் தொடங்கின. வெறும் 6 மணி நேரத்தில் 10,000 யூனிட்கள் முன்பதிவு என்கிற சாதனையை தொடர்ந்து தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் (அனைத்து தளங்களிலும்; ஒரு வாரத்திற்குள்) 1 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ளதாக ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது.
சுவாரஸியமாக இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே இன்று முதல் (அதாவது ஆகஸ்ட் 6, மதியம் 12 மணி முதல்) இந்திய விற்பனையை தொடங்கி உள்ளன. ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? என்னென்ன விற்பனை சலுகைகள் கிடைக்கும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இதோ விவரங்கள்:

விலை விவரங்கள்: ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி-யின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.32,999-க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.34,999-க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.36,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சலுகை விலையை பொறுத்தவரை முறையே ரூ.29,999, ரூ.31,999 மற்றும் ரூ.33,999-க்கு வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ 5ஜி-யின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.26,999-க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.28,999-க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.31,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சலுகை விலையை பொறுத்தவரை முறையே ரூ.23,999, ரூ.25,999 மற்றும் ரூ.28,999-க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் , ரியல்மி இந்தியா வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.
அம்சங்கள்: ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 ஓஎஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், அட்ரினோ 710 ஜிபியு, 12 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் 1 / 1.56-இன்ச் சோனி LYT-701 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் + f/1.88 அபெர்க்ஷர்) + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 8-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் ஏஐ ஆடியோ ஜூம், ஏஐ குரூப் மேம்பாடு மற்றும் ஏஐ ஸ்மார்ட் ரிமூவல் போன்ற பல ஏஐ அடிப்படையிலான அம்சங்களும் உள்ளன, கடைசியாக இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.
மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ரோ பிளஸ் மாடலில் உள்ள அதே டூயல் சிம், சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட் ஆகியவற்றை தான் கொண்டுள்ளது. ஆனால் இது OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராவிலும் வேறுபாடுகள் உள்ளன. இது 50-மெகாபிக்சல் (சோனி LYT-600 1 / 1.95-இன்ச் சென்சார் மற்றும் ஓஐஎஸ்) + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.
முன்பக்கத்தில் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் உள்ளதை போலவே 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. மேலும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக இது 45W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








