Home
Mobile

இவ்ளோ பெரிய ஓட்டையா? இந்த குறையை மறைச்சு தான் Nothing Phone 2-வை விக்குறாங்களா? நம்பி வாங்கலாமா?

அடுத்த வாரம் முதல், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜூலை 21 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம், அம்சங்கள் மற்றும் வித்தியாசமான வடிவமைப்பு பலரையும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.

இருந்தாலும் கூட, எதையும் கண்மூடித்தனமாக வாங்கிவிட கூடாது அல்லவா? ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்கும் ஒரு ஸ்மார்ட்போனை மேலோட்டமாக பார்த்து வாங்கிவிட கூடாது அல்லவா? குறைந்தபட்சம் அதன் நிறைகள் மற்றும் குறைகளையாவது (Pros And Cons) சரிபார்க்க வேண்டும் அல்லவா?

Nothing Phone 2-வின் முதல் விற்பனை: நம்பி வாங்கலாமா?

அப்படியாக ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கும் நத்திங் போன் 2-வை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்கிற கேள்விக்கு.. ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 4 நல்ல காரணங்களும், ஏன் வாங்க வேண்டாம் என்பதற்கான நியாயமான 1 காரணமும் இதோ:

ஏன் நம்பி வாங்கலாம்? காரணம் 01: நத்திங் போன் 2 ஆனது ஃபிளாக்ஷிப்-கிரேடு சிப்செட்டை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 சிப்செட்டை (Snapdragon 8+ Gen 1 SoC) பேக் செய்கிறது. சமீப காலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட மிகவும் வேகமான மற்றும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் இந்த சிப்செட் தான் உள்ளது!

காரணம் 02: இது "தரமான" பிரீமியம் கிளாஸ் பேக் டிசைனையும், பேக் பேனலில் மிகவும் "கூலான" க்ளிஃப் பேக்லைட் இன்டர்ஃபேஸையும் கொண்டுள்ளது; இதன் மூலம் நோட்டிஃபிகேஷன்ஸ் போன்ற சில ஸ்மார்ட்போன் செயல்பாடுகளுக்கு எல்இடி லைட்ஸ் மற்றும் குறிப்பிட்ட சவுண்ட்-ஐ செட் செய்ய முடியும்.

கூடவே இது கடுமையான சூரிய ஒளியில் கூட மிகவும் பிரகாசமான 6.7-இன்ச் டிஸ்பிளேவை வழங்கும் எல்டிபிஓ பேனலை கொண்டுள்ளது. அதாவது இது 10ஹெர்ட்ஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ்-க்கு இடையே சரிசெய்யப்படும் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. கூடுதலாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கான ஐபி54 ரேடிங்கையும் கொண்டுள்ளது.

காரணம் 03: நத்திங் போன் 2 ஆனது நல்ல தரமான படங்களை வழங்கக்கூடிய கேமராஸ் செட்டப்பை கொண்டுள்ளது. போதுமான வெளிச்சம் இருக்கும்போது, ​​பெரும்பாலான சூழ்நிலைகளில் டைனமிக் ரேன்ஜ் நன்றாக இருக்கிறது. (பெரும்பாலான போன்களை போலவே) அல்ட்ராவைடு கேமராவை பயன்படுத்தும் போது புகைப்படத்தின் தரம் சிறிது குறைகிறது. இருப்பினும் போர்ட்ரெய்ட் போட்டோக்களின் ரிசல்ட் கண்ணியமானதாக உள்ளது.

காரணம் 04: நத்திங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனானது நீண்ட கால சாஃப்ட்வேர் சப்போர்ட்டை பெறுகிறது.இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று வருட முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்குமென்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வெளியானதும் அதற்கான அப்டேட் கிடைக்கும்.

ஏன் வாங்காமல் தவிர்க்கலாம்? ஒரு ஒரு காரணம் தான். சிலருக்கு இதுவொரு சாதாரணமான காரணமாக தெரியலாம்; ஆனால் பலருக்கும் இதுவொரு "பெரிய ஓட்டை"யாகவே, அதாவது ஒரு பெரிய குறையாக தெரியும். அது என்னவென்றால், நத்திங் போன் 2 ஆனது 4700mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இது 45W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், 15W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றிகான ஆதரவை கொண்டுள்ளது. இருப்பினும், நத்திங் போன் 2-வின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் அனுப்பி வைக்கப்படாது. எனவே ஒரு சார்ஜரை வாங்க நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
1 convincing reason to avoid buying nothing phone 2 and 4 reasons to buy it without any hesitation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X