மோட்டோரோலாவின் 2 புதிய தொடுதிரை மொபைல்கள்!

மோட்டோரோலா எக்ஸ்டி 531 மற்றும் மோட்டோரோலா எம்டி 870 என்ற இரண்டு மொபைல்களுமே ஆண்ட்ராய்டின் 2.3 ஜிஞ்சர்போர்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக்கூடியவை. அதனுடைய யூசர் இன்டர்பேஸ் பயன்படுத்துவோருக்கு மிகவும் லகுவாக இருக்கும்.
இவற்றின் டிஸ்பிளே அளவைப் பொறுத்தவரை மோட்டோரோலா எம்டி 870 போன் 4 இன்ச் அளவையும் மோட்டோரோலா எக்ஸ்டி 531 போன் 3.5 இன்ச் அளவையும் பெற்றிருக்கிறது. மோட்டோரோலா எம்டி 870யின் பெரிய திரை உண்மையிலேயே பார்ப்பதற்கு சிறந்த அனுபவத்தைத் தரும்.
இரண்டுமே சிறந்த தரத்திலான எச்263 மற்றும் எச்264 வீடியோ பார்மட்களைத் தரக்கூடிய மல்டி வீடியோ மற்றும் ஆடியோ மென்பொருளைக் கொண்டிருக்கிறது. ஆனால் மோட்டோரோலா எம்டி 870 மட்டும் எப்எம் ரேடியோவைக் கொண்டிருக்கவில்லை. இரண்டுமே 3.5எம்எம் யுனிவர்சல் ஆடியோ ஜாக்கைக் கொண்டிருக்கின்றன.
மோட்டோரோலா எம்டி 870 போன் 8 மெகா பிக்ஸல் கேமராவையும், மோட்டோரோலா எக்ஸ்டி 531 போன் 5 மெகா பிக்ஸல் கேமராவையும் வைத்திருக்கிறது. இரண்டுமே வீடியோ காலிங் செய்வதற்கு விரைவாக இயங்கக்கூடிய 3ஜி கொண்ட விஜிஎ முகப்பு கேமராவைக் கொண்டிருக்கின்றன.
கம்யூன்கேசனைப் பொறுத்தமட்டில் இரண்டுமே 3ஜி வைபை, ஜிபிஆர்எஸ் மற்றும் ஈடிஜிஈ இணையதள வசதியையும் மற்றும் யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் வசதிகளையும் கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே சிறந்த பேட்டரி பேக்கப் கொண்டு மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 16ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு சேமிப்பையும் கொண்டுள்ளன.
மோட்டோரோலா எக்ஸ்டி 531 மற்றும் மோட்டோரோலா எம்டி 870 இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் சந்தைக்கு வந்துவிடும்.


Click it and Unblock the Notifications