Home
Mobile

கேலக்ஸி வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது சாம்சங்

By Super
கேலக்ஸி வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது சாம்சங்
மொபைல் உலகில் புதிய அத்தியாயத்தை எழுதும் அம்சங்களுடன் கேலக்ஸி வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்-2 என்ற இந்த மாடல் இதற்கு முன்பாகவே தென்கொரியாவில் சிலாக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்து விட்டதாகவும், அதே மாடல் இப்பொழுது சேம்சங் கேலக்ஸி எஸ்-II என்ற பெயரில் இந்தியாவுக்கு வரப்போவதாகவும் தெரிகிறது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பம் அனைத்தும் ஏற்கவே சிலாக்ஸ் என்ற மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்று தெரிகிறது.

சிலாக்ஸ் மாடலும், சாம்சங் கேலக்ஸி மாடலும் ஒன்றுதான் என்று கருதுகின்றனர். இதில் ஆன்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதன் சென்ட்ரல் பிராஸசிங் யூனிட்(சிபியூ) அதி வேகமாக செயல்படக்கூடிய 1,500 மெகாஹெர்ட்ஸ் ஸ்நாட்ப்டிராகன் ஏபிக்யூ-87060 ப்ராசஸரை கொண்டிருக்கும். ஸ்நாட்ப்டிராகன் ப்ராசஸரின் வேகம் மற்றும் செயல்பாடுகளை பற்றி புதிதாக கூறவேண்டிய தேவை இல்லை.

ஆனால் ஒரு ஸ்மார்ட் போனுக்கு உண்டான, அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த மாடல்.

இதில் 1ஜிபி ரேம் வசதியும், 14.9ஜிபி ரோம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ் II சூப்பர் அமோல்டு ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டது.

480 X 800 பிக்ஸல் வசதி இருப்பதனால் துல்லியமான படங்களை வழங்குகிறது.4.5 இன்ச் கொண்ட மல்டி டச் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் தரமான ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் 3.5மில்லி மீட்டர் ஆடியோ ஜேக் வசதி உல்லது. இதில் இருந்து துல்லியமான ஆடியோ வெளிவர,மோனோ மைக்ரோபோன் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

எட்ஜ் தொழில்நுட்பம் மற்றும் ஜிபிஆர்எஸ் மூலம் இன்டர்நெட் வசதியை பெற முடியும். இதில் தகவல்களை அப்டேட் டெய்து கொள்ள வைபை டிவைஸ்(802.11 b/g/n) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் 3.0 புளூடூத் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளதால் எந்த விதமான தகவல்களையும் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

கணினியில் இருந்தும் தகவல்களைப் பதிவு செய்து கொள்ள, யூஎஸ்பி போர்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சேட்டிலைட் நேவிகேஷன்,ஜியோ டேகிங் யுட்டிலிட்டி போன்ற பயன்பாடுகளுக்காக ஜிபிஎஸ் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

சேம்சங் கேலக்சி எஸ் II மாடலில் இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒன்று வீடியோப் படங்கள் எடுப்பதற்காகவும்,வீடியோக் கான்ஃபிரன்ஸ் வசதிக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்றும் இதில் முகப்புக கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முகப்புக கேமரா 8 மெகாபிக்ஸல் வசதி கொண்டதாக உள்ளது.

இதில் 1X ஸூம் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.எல்இடி ப்ளாஷ் வசதி கொண்டது. இதில் உள்ள செகண்டரி கேமிரா 1.9 மெகாப் பிக்ஸல், வீடியோ காலிங் வசதியை கொடுக்கும். இதன் விலை குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X