Home
Mobile

நோக்கியா என்-8 மற்றும் என்-9 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு அலசல்

By Super
நோக்கியா என்-8 மற்றும் என்-9 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு அலசல்
கணக்கு வழக்கு இல்லாமல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நோக்கியா நிறுவனம், யூசர் ப்ரெண்ட்லியான் என்-9 ஸ்மார்ட்போனை சமீபத்தில் களமிறக்கியுள்ளது.

என்-9 வரவு பிற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் வரவு நோக்கியாவின் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கே கடும் சந்தை போட்டியை கொடுத்துள்ளது.

என்-9 போனில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை தெளிவாக கண்டறிய அதன் முந்தைய வெர்ஷனான என்-8 ஸ்மார்ட்போனுடன் ஒரு ஒப்பிட்டு பார்த்துவிடலாம்.

இரண்டு போன்களும் ஒரே மாதிரியான தொடுதிரையை கொண்டுள்ளன. ஆனால், என்-8 டச் ஸ்கிரீன் அளவில் சிறிது குறைவாக 3.5 இஞ்ச் திரையை கொண்டுள்ளது.

என்-9 போனில் 3.9 இஞ்ச் தொடுதிரையுடன் கர்வ்டு கிளாஸ் கவரிங் கொண்டு பேக்கிங் செய்யப்பட்டுள்ளது. என்-8 ஸ்கிரீன் 360*640 பிக்செல்களையும், என்-9 போன் 480*800 பிக்செல்களையும் கொண்டது.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்-8 சிம்பையான் 3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், என்-9 போன் மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் செயல்படுகிறது.

இரண்டு போன்களும் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், பாப் மெயில் மற்றும் இ-மெயில் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. ஆனால், என்-9 போன் எஸ்எம்எஸ் எடிட்டர் வசதியை கூடுதலாக பெற்றுள்ளது.

இரண்டு போன்களும் ஆற்றல்வாய்ந்த கேமராவை கொண்டுள்ளன. என்-8 போனில் ஆட்டோ போகஸ், செனான் ப்ளாஷ் அம்சங்கள் கொண்ட 12 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது.

அதேவேளை, என்-9 ஸ்மார்ட்போன் ஆட்டோ போகஸ் மற்றும் டியூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

என்-8 போனில் 2* டிஜிட்டல் ஜூம் வசதியும், என்-9ல் 4* டிஜிட்டல் ஜூம் வசதியும் இருக்கிறது. இரண்டிலும் வீடியோ ரெக்கார்டிங் வசதி உண்டு.

மல்டிமீடியோ அம்சங்களில் இரண்டும் அட்வான்ஸ்டு மாடல்களான உள்ளன. என்-8 போனில் எப்எம் ரேடியோ மற்றும் எப்எம் ட்ரான்ஸ்மீட்டர் வசதிகள் உள்ளன. ஆனால், இந்த வசதிகள் என்-9ல் இல்லை.

இரண்டு போன்களிலும் 32 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனுக்காக மெமரி கார்டை பொருத்த முடியும். இரண்டும் ஜாவா சாப்ட்வேரை சப்போர்ட் செய்கிறது.

கனெக்ட்டிவிட்டி வசிதிகளிலும் இரண்டும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. இரண்டிலும் எட்ஜ், ஜிபிஆர்எஸ், வயர்லெஸ் இன்டர்நெட்டுக்கான WLAN வசதிகளை கொண்டுள்ளன. என்-8 போனில் 3 புளூடுத்த்தும், என்-9 ல் வெர்ஷன் 2 புளூடூத்தும் இருக்கின்றன.

என்-8ல் லயன் 1200mAh பேட்டரியும், என்-9 போனில் 1320mAh பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளன. என்-8 போன் 12 மணிநேர டாக்டைமையும், என்-9 போன் 7 மணிநேர டாக்டைம் வசதியையும் கொடுக்கின்றன.

மார்க்கெட்டில் என்-8 ஸ்மார்ட்போன் ரூ.22,000 விலையிலும், என்-9 போன் ரூ.32,000 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை வைத்து பார்த்தால், என்-9 பெஸ்ட்டாக தோன்றுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X