நோக்கியா இ-6 ஸ்மார்ட்போன் சிறப்பு பார்வை

Posted By: Staff

நோக்கியா இ-6 ஸ்மார்ட்போன் சிறப்பு பார்வை
இந்தியாவின் மொபைல்போன் மார்க்கெட்டின் வளர்ச்சி அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளான சீனா மற்றும் அமெரிக்காவை இந்தியா விஞ்சும் என அருதியிட்டு கூறுகின்றனர்.

இதனாலேயே பல முன்னணி நிறுவனங்கள் புதுபுது ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த வகையில் மார்க்கெட் லீடரான நோக்கியாவும் பல புத்தம் புது ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது.

இதில், அந்த நிறுவனம் சமீபத்தில் களமிறக்கிய இ6 ஸ்மார்போனின் வசதிகளை பார்க்கும்போது, இது ஒரு பிசினஸ் கிளாஸ் போன் என்று எளிதாக கூறிவிடலாம்.

சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இ6 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. உலகிலேயே இரண்டு போன்களில் மட்டுமே இந்த சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளன. அதில், நோக்கியாவின் ஒன்று தற்போது நாம் பார்க்கும் இ6 மற்றொன்று, நோக்கியாவின் எக்ஸ்7. இதில், நவீன தொழில்நுட்ப வசதிகளை அப்கிரேடும் செய்துகொள்ளமுடியும்.

நோக்கியா இ6 ஸ்மார்ட்போனில் அனைத்து மல்டிமீடியா பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. மியூசிக் பிளேயர், வீடியோ பிளேயர் மற்றும் எச்.டி உள்ளிட்ட அனைத்து வீடியோ பார்மெட்டுகளும் உள்ளன. எப்எம் ரேடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என பட்டையை கிளப்புகிறது.

இதன் பின்பக்க கேமரா அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஹைடெபினிஷனில் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் வீடியோ காலிங் வசதியை பெற முடியும். புளூடூத், வை-பை, யுஎஸ்பி கனெக்டிவிட்டி வசதிகள் கொண்டது. 2ஜி மற்றும் 3ஜி சப்போர்ட் கிடைக்கிறது. பேட்டரி பேக்கப்பும் போதுமானதாக இருக்கிறது. நாட்டிலுள்ள அனைத்து விற்பனை மையங்களிலும் இது கிடைக்கிறது.

நோக்கியா இ-6 சிறப்பம்சங்கள்:

சிம்பையான் அன்னா ஓஎஸ்

8 மெகாபி்க்செல் கேமரா

வை-பை சப்போர்ட்

720பி வீடியோ ரெக்கார்டிங்

இடிஆர் கொண்ட 3.0 புளூடூத்

வீடியோ காலிங் செய்ய முகப்பு கேமரா

14எம்பிபிஎஸ் வேகம் கொண்ட 3ஜி கனெக்டிவிட்டி

ஜாவா சாப்ட்வேர் சப்போர்ட்

7 மணிநேரம் டாக்டைம் கொண்ட பேட்டரி

இந்த புதிய பிசினஸ் கிளாஸ் ஸ்மார்ட்போன் ரூ.18,000 விலையில் கிடைக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்