மோட்டாரோலாவின் புதிய எக்ஸ்டி 531

Posted By: Staff

மோட்டாரோலாவின் புதிய எக்ஸ்டி 531
முதலில் சிறிய மொபைல் நிறுவனங்கள் மட்டுமே டூவல் சிம் வசதி கொண்ட மொபைல்களைத் தயார் செய்தனர். நாளடைவில் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களும் டூவல் சிம் வசதி கொண்ட மொபைல்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதன் விளைவாக மோட்டாரோலா நிறுவனம் டூவல் சிம் வசதியுடன் மோட்டாரோலா எக்ஸ்டி 531 என்ற மொபைலை வழங்கவிருக்கிறது. இது 3.5 இன்ச் அளவு கொண்ட தொடுதிரையுடன் ஆன்ட்ராடய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீட் ஆபரோட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது. இதனுடைய ப்ராஸஸர் 800 எம்எச்ஸட் சென்ட்ரல் ப்ராஸஸிங் யுனிட்டைக் கொண்டுள்ளது.

இந்த மொபைல் பார்ப்பதற்கு மிகவும் கவரக்கூடியதாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது. இதனுடைய அடர்த்தி 11.95 எம்எம் மற்றும் இதனுடைய எடை 114 கிராம் மட்டுமே. இதனுடைய 3.5 அளவுள்ள தொடுதிரை எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் ட்ஸ்பிளேயில் இருக்கும் எச்விஜிஎ தொழில்நுட்பம் பல வண்ணங்களைத் தருகிறது. மேலும் இது மிகத் தெளிவன விதத்தில் படங்களைக் காட்டுகிறது.

மோட்டாரோலா எக்ஸ்டி 531 உயர்ந்த ரிசலூசன் கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் படம் எடுக்க எடுக்க அது நமக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இந்த கேமராவின் மூலம் நாம் சிறந்த வீடியோ ரிக்கார்டிங் செய்யலாம். இது விஜிஎ முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது.

மோட்டாரோலா எக்ஸ்டி 531 மொபைல் 32ஜிபி அளவு சேமிக்கும் வசதி கொண்டுள்ளதால் நாம் போதுமான அளவிற்கு தகவல்கள் மற்றும் படங்களை சேகரிக்க முடியும்.

இந்த மொபைலை எங்கு எடுத்துச் சென்றாலும் நாம் ஜிபிஎஸ் வசதியைப் பெற முடியும். ஏனெனில் இதன் ஜிபிஎஸ், எ-ஜிபிஎஸ் மூலம் சப்போர்ட் செய்யப்பட்டுள்ளது.

மோட்டாரோலா எக்ஸ்டி 531 மொபைலில் கூகுள் மேப்,கூகுள் நாவிகேஷன் மற்றும் என்கம்பாஸ் போன்றவை ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மொபைல் மூலம் ஆன்ட்ராய்டின் மற்ற பயன்பாடுகளையும் பதிவிரக்கம் செய்யலாம். இது சிறந்த தொடர்பு வசதி அளிக்கக்கூடிய வைபை, ப்ளூடூத் மற்றும் 3ஜி வசதிகளையும் கொண்டுள்ளது.

மற்ற மொபைல்களில் இல்லாத லித்தியம் லான் 1540 எம்எஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் 5 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும். இதனுடைய பேக்கப் 28 நாள்களுக்கு குறையாமல் இருக்கும்.

இத்தனை அம்சங்கள் நிறைந்த இந்த மொபைல் சந்தையில் ரூ. 12000க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot