Home
Mobile

புதிய டியூவல் சிம் மொபைல்கள்: விண்காம் அறிமுகப்படுத்துகிறது

By Super
புதிய டியூவல் சிம் மொபைல்கள்: விண்காம் அறிமுகப்படுத்துகிறது
ஸ்மூத் டச் ஸ்கீரின் மற்றும் டியூவல் சிம் கார்டுகள் பொருத்தும் வசதிகொண்ட இரண்டு பட்ஜெட் விலை மொபைல்போன்களுடன் விண்காம் மொபைல்ஸ் நிறுவனம் விரைவில் மொபைல் மார்க்கெட்டில் களமிறங்குகிறது.

எஸ்ஏஆர் குழுமம் தற்போது விண்காம் பிராண்டு மூலம் மொபைல்போன் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. அடித்தட்டு மக்களின் தேவையை நிறைவு செய்வதை குறிக்கோளாக கொண்டு புதிய மொபைல்போன்களை விரைவில் அறிமுகம் செய்கிறது விண்காம்.

டபிள்யூ-702 மற்றும் டபியூள்யூ-100 என்ற குறியீட்டு பெயர்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த இரண்டு புதிய மொபைல்போன்களும் மென்மையான தொடுதிரை மற்றும் மல்டி டச் வசதி கொண்டதாக வருகிறது. டபிள்யூ-702 போன் 2.8 இஞ்ச் டிஸ்பிளே கொண்டதாகவும், டபிள்யூ-100 போன் 1.8 இஞ்ச் டிஸ்பிளே கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் போன்களில் ஹைடெபினிஷன் கேமரா பொருத்துவது என்பது இயலாத விஷயம். ஆனால், இந்த இரண்டு போன்களிலும் ஹைடெபினிஷன் துல்லியம் கொண்ட 2.0 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக துல்லியம் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்யலாம்.

இரண்டிலும் அதிக டாக்டைமை கொடுக்க வல்ல திறன் வாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளதால், நீண்ட நேரம் பேசினாலும் சார்ஜ் தீர்ந்து விடுமே என்ற கவலை இருக்காது.

பொழுதுபோக்கு அம்சங்களிலும் இரண்டு போன்களும் குறை வைக்கவில்லை. மியூசிக் ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் வீடியோ கேம்ஸ் உள்ளிட்டவை எதி்ர்பார்ப்பை பூர்த்தி செய்யும். ஆற்றல்வாய்ந்த இரண்டு மொபைல்போன்களும் ஓர் ஆண்டுக்கான இலவச சர்வீஸ் வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. எனவே, புதிய நிறுவனத்தின் மொபைலை வாங்குகிறோமே என்ற தயக்கத்தை அறவே போக்குகிறது.

தவிர, போதுமான அளவு சேமிப்பு திறன் கொண்டதாக இந்த இரண்டு மொபைல்போன்களும் வருகின்றன. டபிள்யூ-702 மாடலில் 16ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ல முடியும். இதேபோன்று, டபிள்யூ-100 மாடலில் அதிகபட்சம் 10 ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளலாம்.

என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனுக்கு உரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த இரண்டு போன்களும் மிக குறைந்த விலையில் சந்தைக்கு வருகின்றன. டபிள்யூ-702 மொபைல் ரூ.2,995க்கும், டபிள்யூ-100 மாடல் ரூ.1,495 விலையிலும் சந்தைக்கு வருகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X