Home
Mobile

புதிய மலிவு விலை போன்கள் - எம்டிஎஸ் அறிவிப்பு

By Super
புதிய மலிவு விலை போன்கள் - எம்டிஎஸ் அறிவிப்பு
ஆண்ட்ராய்டு மோகம் உலக அளவில் எல்லா மொபைல் வாடிக்கையாளர்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு போனாக இருந்தால் விரும்பி வாங்குகின்றனர்.

அதை நிறைவு செய்யும் விதமாக எம்டிஎஸ் நிறுவனம் மலிவு விலையில் 2 புதிய ஆண்ட்ராய்டு போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. எம்டிஎஸின் கீழ் இயங்கும் சிஸ்டமா ஷ்யாம் டெலி சர்வீசஸ் நிறுவனம் இதை வெளியிட்டிருக்கிறது.

இந்த இரண்டு போன்களுமே மிக சூப்பராக உள்ளன. ஒரு போன் கறுப்பு வண்ணத்திலும் மற்றொன்று வெள்ளி தகட்டிலும் வந்து மிக அட்டகாசமாக உள்ளன. இரண்டிலுமே சினாப்ட்ராகன் எஸ்1 ப்ராஸஸர் உள்ளது. அவற்றின் பெயர்கள் முறையே எம்டிஎஸ் எம்டிஎஜி 3.1 மற்றும் எம்டிஎஸ் லைவ்வயர் ஆகும். இவை மலிவு விலை மொபைல்களாக இருந்தாலும் இவற்றின் செயல்திறன் மிக நன்றாக இருக்கிறது. இவை வாடிக்கையாளர்களுக்கு சோஷியல் நெட்வொர்க்கிங் சேவைகளை நிறைவாக வழங்குகிறது.

நமக்கு வந்த தகவல்களின்படி எம்டிஎஸ் எம்டிஎஜி 3.1 2.8 இன்ச் திரையுடன் 240 x 300 ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களுடன் 3.2 மெகா பிக்ஸல் கேமார கொண்டிருக்கிறது.

மற்றுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இதன் டிவி வசதியாகும். இரண்டு மொபைல்களிலும் நாம் லைவ் டிவியைக் காணலாம். சோஷியல் நெட்வொர்க் வசதிகளான கூகுள் டாக், நிபூஸ் போன்ற வசதிகளும் இவற்றில் உண்டு. மேலும் இவற்றில் கூகுள் மேப்புகளையும் பார்த்து இதன் மூலம் நாம் பயணம் செய்யும் போது துல்லியாமாக இடங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

இவை இந்திய வாடிக்கையாளர்களுக்கென்றே தயாரிக்கப்பட்டிருப்பதாக எம்டிஎஸ் நிறுவனம் கூறுகிறது. இதன் பேட்டரி பேக்கப்பும் சிறப்பாக உள்ளன. இவற்றை எந்த ஒரு முக்கிய நிகழ்வுகளுக்கு எடுத்துச் சென்றாலும் மிக ராயலாக இருக்கும். இந்த இரண்டு மொபைல்களுமே சிடிஎம்எ நெட்வொர்க் சேவையை வழங்குகின்றன. ஆண்டாராய்டு போன்களை மலிவு விலையில் வழங்க முடியாது என்ற கூற்றை பொய்யாக்குவது போல் எம்டிஎஸ் எம்டிஎஜி 3.1 மற்றும் எம்டிஎஸ் லைவ்வயர் போன்கள் ரூ. 5000க்குள் இந்தியாவில் கிடைக்கின்றன. நாமும் வாங்கி மகிழலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X