மூன்று சிம் கார்டு கொண்ட போன்: இன்டெக்ஸ் அறிமுகம்

By Super
|
மூன்று சிம் கார்டு கொண்ட போன்: இன்டெக்ஸ் அறிமுகம்
இரண்டு சிம் கார்டு மொபைல்போன்களுக்கு ஏற்பட்ட வரவேற்பை கருத்தில்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு செல்லும் வகையில் தற்போது மூன்று சிம் கார்டு கொண்ட போன்களின் வரவு அதிகரித்து வருகிறது.

மொபைல்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இன்டெக்ஸ் நிறுவனம் சந்தையில் தன்னை தக்கவைக்கும் விதமாக மூன்று சிம் கார்டு கொண்ட போனை களமிறக்கியுள்ளது.

இன்டெக்ஸ் ட்ரை டூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போனில் இரண்டு ஜிஎஸ்எம் சிம் கார்டுகள் மற்றும் ஒரு சிடிஎம்ஏ சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் வந்துள்ளது.

இன்டெக்ஸ் ட்ரை டூவில் ஜிபிஆர்எஸ் இணைப்பை பெற முடியும். ஜாவா சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் வசதியும் கொண்டது.

மேலும், 7 மணிநேரம் டாக்டைமும், 300 மணிநேரம் ஸ்டான்ட்- பை மோடு பேக்கப் கொண்ட பேட்டரியும் கொண்டுள்ளதால் எந்த நேரத்தில் சார்ஜ் போய்விடுமோ என்ற பயத்தை விரட்டுகிறது.

5.58 செ.மீ டிஎப்டி திரை, 1.3 மெகாபிக்செல் கேமரா உள்ளிட்டவற்றுடன் ட்ரை டூ வந்துள்ளது. இந்த கேமராவை வெப்கேமராவாகவும் பயன்படுத்தலாம். அனைத்து மல்டிமீடியா அம்சங்களுக்கும் குறைவில்லை.

எம்பி3 மற்றும் எம்பி4 வீடியோ பார்மெட்டுகளை இயக்கும் வசதி, வீடியோ ப்ளேயர் மற்றும் வேவ் மற்றும் ஏஎம்ஆர் பார்மெட்டுகளையும் இயக்கலாம்.

கூடுதல் ஸ்பீக்கர்களுடன் இணைத்து இசையை கேட்டு ரசிக்க வசதியாக 3.5மிமீ விட்டம் கொண்ட ஜாக்கும் உள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. இந்த போன் கிராமம், நகரம் என இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் இன்டெக்ஸ் களமிறக்கியுள்ளது.

கம்ப்யூட்டருடன் இணைத்து இன்டர்நெட் இணைப்பை பெறும் வசதியும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்க்கும் வசதியும் இதில் உள்ளது.

இரண்டு ஜிஎஸ்எம் சிம் கார்டுகளில் வரும் அழைப்புகளையும் மிக எளிதாக மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சிடிஎம்ஏ சிம் கார்டும் ஆக்டிவ் மோடில் இருக்கும் என்பது இதன் தனிச்சிறப்பு.

புளூடூத், மொபைல்டிராக்கர், ஆட்டோ கால் ரெக்கார்டு, தனித்தனியாக 16ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ட்யூவல் சிம் கார்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்த இந்த போன் ரூ.3,750 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X