Home
Mobile

புதிய வரலாறு படைக்க வந்த எச்டிசி ஸ்மார்ட்போன்

By Super
புதிய வரலாறு படைக்க வந்த எச்டிசி ஸ்மார்ட்போன்
எச்டிசி ரன்னிமெட் என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் எச்டிசி நிறுவனம் தாங்கள் சாதனையாளர்கள் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். இதன் 1.5 ஜிஹச்ஸட் க்வல்காம் சிங்கிள் கோர் ப்ராஸஸர் மற்றும் இதன் 768 எம்பி ராம் மிகச் சிறந்த வேலையைச் செய்கின்றன.

எச்டிசி ரன்னிமீட் ஆன்ட்ராய்ட் ஓஎஸ் ஜிஞ்சர்ப்ரீட் 2.3.4 தளத்தில் இயங்குகிறது. குறிப்பாக எச்டிசியில் யுசர் இன்டர்பஸ் எப்போதுமே சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக ரன்னிமீடில் எச்டிசி சென்ஸ் 3.5 யுசர் இன்டர்பேஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

இதன் கப்பாசிட்டிவ் தொடுதிரை 4.7 இன்ச் தொடுதிரையுடன் 800 x 480 பிக்ஸல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இந்த திரை மல்டி டச் கமான்ட்களைக் கொண்டு ப்ராக்ஸிமிட்டி மற்றும் லைட் சென்சார்களை வழங்குகிறது. தரமான 720பி ஹச்டி வீடியோ ரிக்கார்டிங் இந்த மொபைலின் சொத்தாக விளங்குகிறது.

இதன் 8 மெகா பிக்ஸல் ரியர் எல்இடி ப்ளாஷ் கொண்ட கேமரா 28எம்எம் அகல ஆங்கிள் லென்சையும் மற்றும் எப்/2/2 போக்கல் ரேஷியோவையும் கொண்டிருக்கிறது. இந்த கேமரா மூலம் மற்ற கேமராக்களை விட இரண்டு மடங்காகவும் 1 வினாடியில் 60 பிரேம்களையும் பிடிக்க முடியும்.

இதன் முகப்பு விஜிஎ கேமரா மூலம் வீடியோ உரையாடலை மிக எளிதாகச் செய்யலாம். மேலும் இதன் எப்எம் ரேடியோ மற்றும் ப்ளூடூத் (எ2டிபி) ஆகியவை இந்த மொபைலுக்கு மெருகேற்றுகின்றன.

ரன்னிமீடின் ஒலி அமைப்பைப் பார்த்தால் இது சிறந்த ஹெட்போனைக் கொண்டிருக்கிறுது. இந்த ஹெட்போனில் ஆப்டிமல் சின்க்ரோனைசேஷன் உள்ளதால் தரமான இரைச்சல் இல்லாத இன்னிசையைக் கேட்டு மகிழ முடியும். மேலும் இதன் ஒலி அமைப்பு எஸ்ஆர்எஸ் சரவுன்ட் ஒலி வசதியைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதன் 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஹெட்போனுடனும் வெளிப்புற ஒலிப்பெருக்கியுடனும் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி உள்ளதால் இதில் இசை கேட்பது சிறந்த அனுபவத்தைத் தரும். மேலும் ரன்னிமீட் மைக்ரோ யுஎஸ்பி 2.0 கொண்டிருப்பதால் இதை மற்ற கணனிகளோடு எளிதாக இணைக்க முடியும் அதோடு ஜார்ஜ் செய்ய முடியும்.

ரன்னிமீட் தனது வைபை 802.11 பி/ஜி/என் மூலம் மிக விரைவில் வைபை நெட்வொர்க் தொடர்பைப் பெறமுடியும். மேலும் இதன் மெமரி சேமிப்பைப் பார்த்தால் இது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 16ஜிபி சேமிப்பு வசதியும் மற்றும் 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய சேமிப்பு வசதியும் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டின் அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆண்ட்ராடய்டு சந்தையிலிருந்து இதில் எளிதாக பெற முடியும். மேலும் இதன் மின்திறனைப் பார்த்தால் 1930 எம்எஹச் பேட்டரி இதற்கு நீண்ட பேக்கப்பையும் நீண்ட ஆயுளையும் வழங்குகிறது.

ஜிபிஎஸ் வசதி கொண்ட மற்றும் டிஎல்என்எ சான்று பெற்ற எச்டிசி ரன்னிமெட் மலிவு விலையில் வரும் என்று தெரிகிறது. ஆனால் அதன் விலை பற்றி விவரம் இன்னும் வரவில்லை. ஆனால் விரைவில் வந்துவிடும் என்று நம்புவோம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X