ஆற்றல்வாய்ந்த ப்ரி-3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்: எச்பி

வரும் 2015ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்போம் என அந்த நிறுவனம அருதியிட்டு கூறுகிறது. இதற்காக, தனது சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெப் ஓஎஸ் கொண்ட பல புதிய மாடல்களை சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எச்பி ப்ரி-3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை காணலாம்.
டாப் கிளாஸ் என்று கூறப்படும் அனைத்து லேட்டஸ்ட் அம்சங்களுடன் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. 3.5 இஞ்ச் தொடுதிரை கொண்ட இந்த போன் அருமையான கிளாரிட்டியை கொடுக்கிறது. ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைவிட, எச்பியின் வெப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பான செயல்பாடுகளை கொண்டுள்ளது.
அதிவேக செயல்பாடுகள் கொண்ட 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்ட இந்த போன் மல்டி டாஸ்கிங் செயல்பாடுகளில் பின்னுகிறது. 512 எம்பி ரேமும் பொருத்தப்பட்டுள்ளது.
அனைத்து மல்டிமீடியோ பார்மெட்டுகளையும் சப்போர்ட் செய்யும் இந்த போன் வீடியோ ப்ளேபேக் வசதிகளையும் கொண்டுள்ளது.
எல்இடி ப்ளாஷ், ஆட்டோஃபோகஸ் மற்றும் ஹைடெபினிஷன் கொண்ட கேமரா துல்லியமான வீடியோ ரெக்கார்டி செய்வதற்கு உத்தரவாதம் கொடுக்கிறது. வீடியோ காலிங் செய்வதற்காக முகப்பு கேமராவும் இதில் உண்டு.
புளூடூத், வயர்லெஸ் லேன், 3ஜி, கம்ப்யூட்டருடன் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கனெக்ட்டிவிட்டி வசதிகளும் உள்ளது.
எச்பி பிரி-3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
வெப் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
ஆற்றல்வாய்ந்த 1.4 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர்
5 மெகா பிக்செல் கேமரா
வை-பை மற்றும் புளூடூத்
720பி வீடியோ ரெக்கார்டிங்
எப் ரேடியோ
ஜாவா சப்போர்ட்
இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.28,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications