வியூசோனிக் வீயூபேட் 10

Posted By: Staff

வியூசோனிக் வீயூபேட் 10
பல டாப்லட் கனணி நிறுவனங்கள் தங்களது டாப்லட் கனணிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குவதால் வரும் காலத்தில் டாப்லட் கனணி சந்தை ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டும் என நம்பலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஜபேட்தான் டாப்லட் கனணி புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது.

மொபைல்களும் ஸ்மார்ட்ஃபோன்களும் போட்டிபோடும் தற்போது டாப்லட் துறை தனக்கான வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெறவேண்டிய நிலையில் உள்ளது. இவற்றில் ஓஎஸ் வழங்கும் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் நிறுவனங்களிடையே ஒரு பெரிய போராட்டமே நடந்து வருகிறது.

ஆனால் வியூசோனிக் வீயூபேட் 10 ஓஎஸ் மற்றும் அதே ஹார்ட்வேரில் இயங்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இது ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரோயோ மற்றும் விண்டோஸ் 7 ஆகிய 2 ஓஎஸிலும் இயங்கக்கூடியது.

வியூசோனிக் வீயூபேட் 10 டாப்லட் இன்டலின் சக்தி வாய்ந்த 1.6ஜிஎச் ப்ராஸஸரைக் கொண்டு டாப்லட்டுக்குத் தேவையான ப்ராஸஸிங் மற்றும் கம்ப்யூட்டிங் வேலைகளைச் செய்கிறது.

வியூசோனிக் வீயூபேட் 10 பெரிய 10.1 இன்ச் அளவில் தொடுதிரையைக் கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டுடன் வைஃபை மற்றும் புளூடூத் கனக்டிவிட்டியையும் கொண்டுள்ளது.

வியூசோனிக் வீயூபேட் 10 வலிமையற்ற 1.3 பிக்ஸல் கேமராவைக் கொண்டிருப்பதால் ஜபேட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் அளவிற்கு தெளிவான தரமான படங்களை எடுக்க முடியாது. மேலும் இவற்றில் உள்ள எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் விஜிஎ விடியோ அவுட் தரமானதாக இல்லை.

இவற்றில் உள்ள ஆன்ட்ராய்டு 2.2 ஓஎஸ் நன்றாக இல்லை. ஏனெனில் ஆன்ட்ராய்டின் ஹனிகோம்ப் பெரிய திரைகளுக்குத்தான் பொருந்தும். வியூசோனிக் வீயூபேட் 10 போன்ற பெரிய திரைக்கு பொருந்தாது. மேலும் இவற்றில் ஹனிகோம்ப்பை அப்கிரேட் செய்யும் வசதியும் இதில் இல்லை.

வியூசோனிக் வீயூபேட் 10க்கிற்கு விண்டோஸ் 7 ஓஎஸ் சரியான பலனைத் தருகிறது. ஆன்ட்ராய்டைவிட இதன் தொடுதிரை ஜகன் மற்றும் மெனு இதில் சிறப்பாக இருக்கிறது.

இருந்தாலும் இதன் டிவைஸ் ஆன்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இவற்றின் ஆப்ஸை சரியாக கொண்டிருக்கவில்லை. விண்டோஸ் தரமான ஆப்ஸை வழங்குகிறது. ஆனால் அது தொடுதிரைக்கு ஒத்துவராது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் வியூசோனிக் வீயூபேட் 10ன் சிறப்பு அம்சம் அது வழங்கும் டூவல் ஓஎஸ் ஆகும். எனவே இது ஐபேடுக்கு போட்டியாக இருக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot