Home
Mobile

மூன்று சிம் கார்டு மொபைல்: டி- சீரிஸ் அறிமுகம்

By Super
மூன்று சிம் கார்டு மொபைல்: டி- சீரிஸ் அறிமுகம்
டெல்லி: சினிமா இசைத்தட்டுக்கள் வெளியிடுவதில் புகழ்பெற்ற நிறுவனமான டி- சீரிஸ் தற்போது மொபைல்போன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்திய சந்தையின் நாடித்துடிப்பை அறிந்துகொண்டு, அதற்கு தக்கவாறு குறைந்த விலையில், அதிக வசதிகள் கொண்ட போன்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

சந்தையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை பெறவும் புதிய அம்சங்களுடன் மொபைல்போனை வெளியிட தீர்மானித்த அந்த நிறுவனம் தற்போது அதை பறைசாற்றி உள்ளது.

ஆம், ஒன்றல்ல, இரண்டல்ல... மூன்று சிம் கார்டுகளை பொருத்திக்கொள்ளும் வகையில், புதிய மொபைல்போனை நம்ப முடியாத விலையில் அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது.

டி- சீரிஸ் ப்ளே333 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போன் புத்தம் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ளது.

3 சிம் கார்டுகளும் ஸ்டான்ட்-பை மோடில் இருக்கும்படியான வசதிகொண்ட இந்த போனில், அனைத்து மல்டிமீடியா பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கிறது.

2 இஞ்ச் டிஸ்பிளே, எப்எம் ரேடியோ, கூடுதல் ஸ்பீக்கர்களை இணைக்கும் விதத்திலான 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன.

மேலும், டியூவல் எல்இடி டார்ச் லைட், கூடுதல் சேமிப்பு திறனை பெறுவதற்கு 8 ஜிபி திறன் கொண்ட மெமரி கார்டு பொருத்திக்கொள்ளும் வசதி மற்றும் 1.3 மெகாபிக்செல் கொண்ட கேமரா ஆகியவையும் இதில் உள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதியும் உண்டு. ஜாவா சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இந்த போன் பேட்டரி பேக்கப்பிலும் சிறப்பாக இருக்கிறது.

ஒரு மொபைல்போனுக்கு தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களையும் கூடுதலாகவே பெற்றுள்ள இந்த போனுக்கு ரூ.2,250 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் மத்தியில் டியூவல் சிம் கார்டு கொண்ட போன்கள் பெற்ற அதே வரவேற்பை எதிர்காலத்தில் டிரிப்பிள் சிம் கார்டு போன்களும் பெறும் என சந்தை நிபுணர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X